பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பாழ்பட்டு கின்ற தாமோர் பாரத தேசக் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மாநீ வாழ்க வாழ்க" என்று போற்றுகின்ருர். ஆனல் காந்தி அடிகள் தலைமை ஏற்று விடுதலை இயக் கத்தை நடத்துவதற்கு முன்பாகவே இந்த நாட்டை, முக்கியமாகத் தமிழ்நாட்டைப் பாரதியார் அந்த இயக்கத் திற்குத் தயார்செய்ய முனைகின்ருர். அவருடைய எழுத்துத் திறம் பலவிதமான இடைஞ்சல்களையும் மீறி அந்த நல்ல பணியைச் செய்ய முற்படுகிறது. இதை எண்ணிப் பார்க்கும்போதுதான் பாரதியா ருடைய தொண்டின் சிறப்பு நமக்கு நன்கு புலப்படும். விடுதலை இயக்கம் ஓங்குகின்ற காலத்தில் அதற்கு உதவுவன போல இவருடைய பாடல்கள் பொது மேடை களிலே எங்கும் ஒலிக்கின்றன. இவருடைய பாடல்களைக் கேட்ட மக்கள்: ஜயமுண்டு பயமில்லை என்று எழுச்சி கொண்டார் é# ᎧᏂᎢ• அச்சத்தைப் போக்குவதையே, குழந்தைக்கும் "அச்சம் தவிர், ஆண்மை தவறேல்" என்று அவர் போதித்தார். பெரியவர்களுக்கும் இதையே 'பயமெனும் பேய்தன்னை அடித்தோம்" என்பது போன்ற கவிதை வரிகளாலும் தைரியம், புதிய உயிர் முதலிய கட்டுரைகளாலும் எடுத்துச் சொல்லுகிரு.ர். பாரத தேசத்தில் ஒவ்வொருவனும் செய்வதற்குரிய தியானம் என்ற கட்டுரையில் இவர் சொல்லுவதாவது: