பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2] "தெய்வ பக்தி உள்ளவர்களாயினும், நாஸ்திகர் களாயினும், எந்த மார்க்கஸ்தராயிருந்தாலும் அவர் களுக்குத் தியானம் அவசியம். பாரத தேசத்தில் ஒவ்வொரு வனுக்கும் தற்காலத்தில் நல்ல தியானம், உணவைக் காட்டி லும் இன்றியமையாதது. சோற்றை விட்டாலும் விடு. ஒரு தனியிடத்தே போயிருந்து உயர்ந்த சிந்தனைகள், அமைதி கொடுக்கக்கூடிய சிந்தனைகள், பலம் தரக்கூடிய சிந்தனைகள், துணிவும் உறுதியும் தரக்கூடிய சிந்தனைகள் இவற்ருல் அறிவை நிரப்பிக்கொண்டு தியானம் செய்வதை ஒரு நாளேனும் தவற விடாதே...... சோர்வும் தைரியமும் விளைவிக்கத் தக்க எண்ணங்களுக்கு இடங்கொடாதே. ஊற்றிலிருந்து நீர் பெருகுவதுபோல உனக்குள்ளிருந்து தெளிந்த அறிவும், தீரத் தன்மையும் பொங்கி வரும். உனது இஷ்ட சித்திகளெல்லாம் நிறைவேறும். இது சத்தியம், அனுபவத்திலே பார்.” அச்சங் கூடாது, சோர்வு கூடாது, ஜாதிப் பிரிவினைகள் கூடாது, ஒற்றுமையே வேண்டும் என்று பலவழிகளிலும் வலியுறுத்துகிருர் பாரதியார். சோர்வு கூடாது என்பதை இருள் போன்ற கதை களிலும் இவர் எடுத்துக் காண்பிக்கிரு.ர். கரோமி, கரோமி, கரோமி (செய், செய், செய்) என்று தாய் தனக்கு உபதேசித்த மந்திரத்தைக் கொண்டே ராஜ குமாரன் குகையினின்றும் விடுதலை பெறுகிருன். இது ஒர் அழகிய உருவகக் கதையாகும். முக்கியமாக, இந்துக்களும், இஸ்லாமியரும் ஒருங் கிணைந்து வாழ்வதில்தான் இந்த நாட்டின் கதிமோட்சம் இருக்கிறது என்பதைப் பாரதியார், தெளிவாக அன்றே உணர்கிருர். சமயத்தால் இவர் யாரையும் பிரித்துவைக்க நினைக்கவில்லை. இந்த இருபெரும் சமயங்களையும், மற்று