பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

艺2 சமயங்களையும் சேர்ந்த பாரத மக்கள் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்கிரு.ர். சத்ரபதி சிவாஜி தன் சைன்யத்தை நோக்கிக் கூறுவ தாக எழுதியுள்ள கவிதைக்கு அவர் தமது இந்தியா வார இதழில் எழுதியுள்ள குறிப்புப் பெரிதும் கவனத்திற் குரியது. வரலாற்று நோக்கிலேயே அக்கவிதையைப் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிரு.ர். இந்தச் செய்யுளிலே நமது மகமதிய சஹோதரர்களுக்கு விரோத மாகச் சில வசனங்கள் உபயோகிக்க நேர்ந்திருப்பது பற்றி விசனமடைகின்ருேம். இக்காலத்து மகமதியர்கள் பாரத பூமியின் சொந்தப் புத்திரர்கள் என்பதையும், ஹிந்துக் களும் மகமதியர்களும் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகள் போல் நடந்துகொள்ளவேண்டும் என்பதையும் பலமுறை வற்புறுத்தி யிருக்கிருேம்' என்று அதில் ஐயத்திற் கிடமில்லாமல் எழுதியுள்ளார். இந்தியா வார இதழ் பாரதியாரின் துணிச்சலையும், அதன்மூலம் எவ்வாறு தேசபக்தியை மக்களுக்கு ஊட்டினர் என்பதையும் நன்கு வெளிப்படுத்துகிறது. சூரத் காங்கிரஸ் 1907, டிசம்பர்27-ஆம் தேதி தொடங் கிற்று. மிதவாதிகளுக்கும், திலகர், வ. உ. சி. போன்ற தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்ட மோதலின் விளைவால் அது குழப்பத்தில் முடிந்தது. இந்தக் காங்கிரசுக்குச் சென்று திரும்பிய பாரதியார் மேலும் தீவிரமாக இந்தியா வார இதழில் எழுதத் தொடங்கினர். 'பாரதியாரின் இந்தியா பத்திரிகை, சட்ட வரம்பை மீறி நெருப்பு மழை பொழியத் தொடங் கிற்று' என்று எஸ். ஜி. இராமாநுஜலு நாயுடு குறிப்பிடு கின்ருர்.