பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வானுறு தேவர் மணியுல கடைவோம்: வாழ்வமேற் பாரத வான்புகழ்த் தேவியைத் தாழ்வினின் றுயர்த்திய தடம்புகழ் பெறுவோம்! போரெனில் இதுபோர்! புண்ணியத் திருப்போர்; பாரினில் இதுபோற் பார்த்திடற் கெளிதோ? ஆட்டினைக் கொன்று வேள்விகள் இயற்றி வீட்டினைப் பெறுவதை விரும்புவார் சிலரே; நெஞ்சகக் குருதியை நிலத்திடை வடித்து வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம்யாம் வேள்வியில் இதுபோல் வேள்வியொன் றில்லை; தவத்தினில் இதுபோல் தவம்பிறி தில்லை: முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட, மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர் காதலின் நண்பர் கலைதரு குரவரென்று இன்னவர் இருத்தல்கண்டு இதயம்நொந் தோளுய்த் தன்னருந் தெய்விகச் சாரதி முன்னர் ‘ஐயனே! இவர்மீ தம்பையோ தொடுப்பேன்? வையகத் தரசும் வானக ஆட்சியும் போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன். மெய்யினில் நடுக்கம் மேவுகின் றதுவால்: கையினில் வில்லும் கழன்றுவீழ் கின்றது: வாயுலர் கின்றது; மனம்பதைக் கின்றது: ஒய்வுறுங் கால்கள்; உலைந்தது சிரமும் வெற்றியை விரும்பேன்; மேன்மையை விரும்பேன்; சுற்றமிங் கறுத்துச் சுகம்பெறல் விரும்பேன்; எனையிவர் கொல்லினும் இவரையான் தீண்டேன்; சினையறுத் திட்டபின் செய்வதோ ஆட்சி?" எனப்பல கூறியவ் விந்திரன் புதல்வன் கணப்படை வில்லைக் களத்தினில் எறிந்து H30 135 140 145 150 155