பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፳0 பிறப்பினில் அன்னியர், பேச்சினில் அன்னியர். சிறப்புடை யாரியச் சீர்மையை யறியார். குறிப்பு :-இப்பாடல் இந்தியா' வார இதழில் முதன் முதலாக வெளிவந்துள்ளது. இதை எழுதிய தன் நோக்கத்தைப் பற்றியும், இதை வரலாற் றுக் கண்கொண்ட பார்க்க வேண்டுமே யல்லாது இன்று நமது இஸ்லாமிய சகோதரர்கள் இதைப் படித்து விரோத மனப்பான்மை கொள்ளக் கூடாது என்பது பற்றியும் அவ்வார இதழில் கீழ்க்கண்ட குறிப்புக் காணப்படுகிறது. அதையும் சேர்த்துப் பதிப்பித்தல் பொருத்தமாக இருக்குமென்று இங்கே தருகின்றேன். "மற்ருெரு பக்கத்தில் சிவாஜி மகாராஜா தமது படைகளை நோக்கிக் கூறியதாகக் கற்பனை புரிந்து ஒரு செய்யுள் பிரசுரமடைந்திருக்கிறது. சரித்திர சம்பந்த மான செய்யுட்கள் புனைவதில் இக் காலத்துத் தமிழர்கள் சாதாரணமாகப் பிரவேசிப்பதில்லை. எனினும், சுதேசப்பற்று மிகுதிப்படுவதற்கு மேற் கூறிய விதமான செய்யுட்கள் மிகவும் அவசிய மானவை. இந்தச் செய்யுளிலே நமது மகமதிய சஹோதரர்களுக்கு விரோதமாகச் சில வசனங்கள் உபயோகிக்க நேர்ந்திருப்பது பற்றி விசனமடை கின்ருேம். இக்காலத்து மகமதியர்கள் பாரத பூமி யின் சொந்தப் புத்திரர்கள் என்பதையும், ஹிந்துக் களும், மகமதியர்களும் ஒரு தாய் வயிற்றுக் குழந் தைகள் போல் நடந்துகொள்ள வேண்டும் என்பதை யும் பலமுறை வற்புறுத்தியிருக்கிருேம் என்ற போதி லும், சிவாஜி மஹாராஜா காலத்தில் ஹிந்துக்களுக் கும், மகமதியர்களுக்கும் விரோதமிருந்தபடியால், அவர்களைப்பற்றி மஹாராஜா சிவாஜி சில கோப மான வார்த்தைகள் சொல்லியிருப்பது வியப்பாக மாட்டாது. மேற்படி செய்யுளிலே மகமதியர்களைப்