பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 இங்கு வாழ்பவர்களெல்லாம் நமது ஜனக் கூட்டத்தைச் சேர்ந்தவராகின்றனர். கிருஸ்துவர்களாயினும், பார்ஸிகளாயினும், மகம்மதி யராயினும், எங்கிருந்து வந்து எந்தி இஷ்ட தெய்வத்தைக் கொண்டாடிய போதிலும், பாரத பூமியிலே பிறந்து வளர்ந்து இதையே சரணுகக் கொண்ட மனிதர்களை யெல்லாம் பாரத ஜாதியிலே சேர்த்துக் கணக்கிட வேண் டும். இது ஒரே ஜாதி; பிரிக்க முடியாதது; அழிவில்லாதது. இதற்கு ஆதாரமும் மூலபலமுமாவது யாதெனில், ஆரிய ஸம்பத்து. அதாவது ஆரியரின் அறிவும், அந்த அறிவின் பலன்களும். ஆரிய . லம்பத்து ஸ்ம்பத்து என்பது ஸம்ஸ்கிருதச் சொல். இதன் பொருள், செல்வம். ஆனல் இங்கே செல்வம் என்பது திரவியத்தையும், பூஸ்திதியையும், ஆடு மாடுகளையும் மாத்திரமே குறிப்பிடுவதன்று. (1) அறிவுச் செல்வம், (2) ஒழுக்கச் செல்வம், (3) பொருட் செல்வம் ஆகிய மூன்றையும் குறிப்பிடும். ஆர்ய ஸ்ம்பத்து என்பது ஹிந்துக்களுடைய அறிவு வளர்ச்சி. - நமது வேதம், நமது சாஸ்திரம், நமது ஜனக்கட்டு, நமது பாஷைகள், நமது கவிதை, நமது சிற்பம், நமது ஸங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில் முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், நமது குடிசை கள்-இவை அனைத்துக்கும் பொதுப்பெயர் ஆர்ய ஸம் பத்து. காளிதாஸன் செய்த சாகுந்தல நாடகம், ஹிந்தி பாஷையிலே துளnதாஸர் செய்திருக்கும் ராமாயணம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள் திருமொழி-இவையனைத்துக்கும் பொதுப் பெயராவது ஆரிய ஸம்பத்து. தஞ்சாவூர்க் கோயில், திருமலை நாயக்கர்