பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

pど விதமான மதி மயக்கத்தால் குழந்தைகளைப் போலவும் பெண்களைப் போலவும் நடந்துகொள்வதைப் பார்த்தால் அனைத்தையும் துறந்த ஞானிக்குக்கூட ஒருவிதமான பரிதாபம் ஜனிக்குமல்லவா? அபேதாநந்தருக்கும் அவரைப் போன்ற ஞானி களுக்கும் நாம் பெரிய உபசரணைகள் நடத்துவதால் மட்டும் அவர்களது பிரீதிக்கு உள்ளாய்விட மாட்டோம். பல்லக்குகள், புஷ்ப ஹாரங்கள், வாத்தியங்கள் என்ப வற்றைக் கொண்டு ஒரு ஞானியின் கிருபையை சம்பாத் தியம் செய்துவிடுவதென்ருல் அது எளிதான காரியமா? அவர்களது உபதேசத்தின் உண்மையைக் கிரகித்து நம்மால் இயன்றமட்டும் அதன்படி நடக்க முயல்வதே நாம் அவர்களுக்குச் செய்யக்கூடிய கடமையாகும். தீரத் தன்மையைப் பற்றி மட்டிலுமல்லாமல் ஐக்கியம் முதலிய மற்ற விஷயங்களைப் பற்றியும் அபேதாநந்தர் பேசியிருக்கிருர். இந்தியாவில் ஒரு கோடி ஜனங்கள் இருக்கிருர்கள். ஆனல் ஒருவனுக் கொருவன் சம்பந்த மில்லாமல் ஒவ்வொருவன் ஒவ்வொரு மாதிரி எண்ணங் கொண்டிருக்கிருன். ஆதலால் வெவ்வெறு வகைப் பட்ட ஒரு கோடி எண்ணங்கள் ஏற்பட்டுப் போய் விடுகின்றன. எனவே ஒரு காரியமும் எளிதாகச் சாதிக்க முடியாமல் போய் விடுகிறது. பிரிட்டிஷ் தேசத்தில் 4 கோடி ஜனங்கள் மாத்திரமே இருந்தபோதிலும். அவர்களனைவரும் ஒரே விதமான எண்ணங் கொண்டிருப்பதால் அவர்கள் காரியங் கள் மிகவும் எளிதாகக் கைகூடிவிடுகின்றன. இதனை விவேகாநந்தர் வெகு தெளிவாக எடுத்துக் கூறி இருக்கிரு.ர். இது நிற்க, அபேதாநந்தர் சென்னை மாகாணத்திலும் நகரத்திலும் பெற்ற உபசரணைகள் அவருக்கு இத் தேசம்