பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு கொடிய சாத்தான். அது பல் தீமைகளை உருவாக்கு கிறது. உலகத்தை இயக்கியும் நடத்தியும் செல்வது

  • ' அவசியம் (Necessity) என்னும் ஒரு சக்தி. ஆனால்

அந்தச் சக்தியை மனிதன் தனது வடிவத்தில் சித்திரிக்கக் கூடாது. அதற்கு மனித உணர்ச்சியோ, மனித மனமோ கிடையாது. தவறும், தீமையும் மனிதனின் கடந்த காலத்தை விகாரமாக்கிக் கறைப்படுத்திவிட்டன, ஆனாலும், அறிவும் தர்மமும் அவனுக்கொரு புதிய பொற்காலத்தை (வாக்களிக் கின்றன, அந்தப் பொற்காலத்தை மனிதன் எய்த முடியும் . இதற்கு மனிதனும் இயற்கையும் இணைந்து செயல்பட வேண்டும். சரிந்திருக்கும் உலகம் அதனால் நேராகும்; நேராக நேராக, உலகில் எல்லாமே செம்மையுறும். பணிப் ' பாலைவனங்கள்கூடப் பழத்தோட்டங்களாக அப்போது" மாறும். மனிதன் பிற உயிர்களைக் கொன்று தின்னாமல் மரக் கறி உன்வையே தின்பான். அதனால் அவனை நோயும் நொடியும் அண்டா; அவன் நெடுநாள் வாழ்வான், அத்துடன் மனிதர்களிடையே எல்லாவிதச் சமத்துவங்களும் நிலவும். ஆனந்தமும் விஞ்ஞானமும் கைகோத்து வளர்ந்து அமைதி நிரம்பிய பூலோக சுவர்க்கத்தை உண்டாக்கும், சிறைக்கூட்டங் களும், மடாலயங்களும் தகர்ந்து பொடியாகி மறைந்து விடும். ஆணும் பெண்ணும் சமமாவார்கள். காதல் வாழ்க்கை உண்மையும் அன்பும் நிறைந்து விளங்கும்; விபசாரம் மறையும்; அறிவின் ஆட்சியாலும் மாட்சி யாலும் மனித சுதந்திரம் மேம்படும்; பஞ்சமும் வறுமையும் ஒழியும்; -அள்ள அள்ளக் குறையாத வளம் படைத்த பூமித் தாய் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்வாள். இவ்வாறாக, மனிதன் இந்த உலகத்திலேயே, பரிபூரணத் தன்மை எய்தி, அமரனாக விளங்குவான். அது தான் மனித சமுதாயத்தின் பொற்காலம்.' இத்தகையதொரு மகத்தான எதிர்காலச் சமுதாயக் கனவை உரு வாக்கிய ஷெல்லி, இதற்கு முன்பே பல தத்துவ நூல்களையும் கற்றிருந்தான், பதி னெட்டாம் நாற்றாண்டின் பிரெஞ்சுத் தத்துவ ஞானிகள், கிரேக்க ஞ சனி பிளேட்டோ , குறையா? பூர்த். பரிபூர் , 103