பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மற்றும் வில்லியம் காட்வின் முதலியோர் அவனைக் கவர்ந் திருந்த , ஆசிரியர்கள். இவர்களில் குறிப்பாக, வில்லியம் காட்வினிடம் அவனுக்குப் பெரிதும் ஈடுபாடு இருந்தது என்பதை முன்னமேயே பார்த்தோம், 'ராணி மா'பை உருவாக்கிய காலத்தில் அவன் கற்றுத் தேர்ந்த, அங்கீகரித்த கருத்துக்கள் பலவும் அவனுக்குப் பயன்பட்டன. இதனால், 11 காட்வின் வசனத்தில் எழுதியதை ஷெல்லி 'ராணி மாப்' என்ற கவிதையில் எழுதினாள். அவ்வளவுதான் என்று கூடச் சில விமர்சகர்கள் கூறினார்கள். எனவே நாம் ஷெல்லி வைக் கவர்ந்த காட்வினின் கோட்பாடுகளை ஒட்டு மொத்த மாகவேனும் சற்றே தெரிந்துகொள்ள வேண்டும் : ... ' அவசியம்' என்ற ஒரு சக்திதான் உலகத்தை இயக்கி நடத்துகிறது; ஆண்டவனல்ல. , அரசனைப் . போலவே ஆண்ட்வனும் கீழே இறக்கப்பட வேண்டிய ஒரு கொடுங் கோலன்; சமூக அமைப்புகளும், கட்டுப்பாடுகளும் மனித வாழ்க்கையைக் கெடுக்கின்றன; அவற்றின் நாசகரமான செல்வாக்கு மனிதனின் நற்குணத்தையும் நல்லொழுக்கத் தையும் பறிக்கிறது; மனிதனுக்கு எவ்விதமான கட்டுத்தளை களும் கூடாது; காதல் வாழ்க்கையிலும்கூட கல்யாணம் என்ற பந்தம் கூடாது; மனிதர்கள் தம்மைத் தாமே ஆன முடியும்; ஆளவேண்டும். உலகத்தில் எல்லாரும் எல்லாமும் சமமாக, பொதுமையாக இருக்க வேண்டும்: மனிதனின். தீய குணங்களைப் போக்க முடியும்; அவனைத் தீமையெல்லாம் நீங்கிய நல்லவனாக, பரிபூரணத் தன்மை வாய்ந்தவாகச் செய்யமுடியும்; அறிவின் வலிமை மிகவும் உயர்ந்தது; ஆயுத பலத்தையும் அரசு பலத்தையும்விட. அது உயர்வானது; எனவே அதன் மூலம் பலாத்காரத்தை வெற்றி கொள்ள முடியும்; இதனால் தீமையைத் தீமையாலும் பலாத் : காரத்தைப் பலாத்காரத்தாலும் எதிர்க்கத் தேவையில்லை ; சாத்வீகமான எதிர்ப்பின் மலமே வெற்றிகாண இயலும்; எங்கும் பரந்த கருணையும், பரிவும், அன்பும், உண்மையும் நிலவச் செய்ய வேண்டும்; செய்ய முடியும் - இவையே' காட்வின் கூறிய கோட்பாடுகளின் மேலோட்டமான 104