பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாராம்சம் எனச் சொல்லலாம். அவரது காலத்தில் வாழ்ந்த வில்லியம் ஹாஸ்லிட், 'அரசியல் நீதி* என்ற காட்வினின் நூலைப் பற்றிக் குறிப்பிடும்போது, மிகவும் புகழப் பெற்ற 'அரசியல் நீதி பற்றிய விசாரணை' என்ற நூலைப்போல், நமது காலத்தில் வேறு எந்தவொரு படைப்பும் நாட்டின் தத்துவார்த்த சிந்தனைக்கு அத்தகையதோர் அடியைக் கொடுத்ததில்லை ” (The Spirit of the Age-William Hazlitt) எனக் கூறுகின்றார். இளமையிலேயே தர்மாவேச உணர்ச்சியும், சத்திய வேட்கையும் கொண்ட ஷெல்லியை, காட்வினின் கருத்துக்கள் கவர்ந்ததில் வியப்பேதுமில்லை. மேலும் ஷெல்லி கனவு கண்ட பொற்காலத்தை வகுத்துரைப்பதில் இத்தகைய கருத்துக்களும் அவனுக்குத் துணை நின்றதை நாம் கண்டு கொள்ளலாம், பொற்காலம் பற்றிய ஷெல்லி யின் கருத்துக்கள் பிரதானமாக அவனது 'ராணி மாபிலும், பின்னர் அவன் தன் வாழ்நாளில் எழுதிய 'இஸ்லாமின் புரட்சி', 'கட்டறுந்த பிராமித்தியூஸ்', * அட்லாஸ் மோகினி', * ஹெல்லாஸ்' ஆகிய பெரும் படைப்புக்களிலும் இடம் பெற்றுள்ளன. இவற்றில் ராணி மாப் அவன் தனது பதின்வயதுப் பருவத்தில் படைத்த நெடுங் கவிதை போகும்; ஹெல்லாஸ் அவன் காலமாவதற்கு முன் கடைசியாக எழுதி முடித்த அற்புதமான காவிய நாடகமா கும். எனவே " பொற்காலத்தைப் பற்றிய ஷெல்லியின் கனவு அவனது இலக்கிய வாழ்க்கைக் காலம் முழுவதிலுமே அவனது நெஞ்சில் நிறைந்து நின்றது எனச் சொல்லலாம். ' 'ராணி மா* பின் கடைசி இரு படலங்களிலும் (படலம் 8, 9) ஏறத்தாழ நானூறு வரிகளில் அவன் அந்தப் பொற் காலத்தை வருணித்துள்ளான். முக்காலமும் உணர்ந்த அந்தத் தேவதை அந்தக் கன்னியின் ஆத்மாவுக்கு அதன்: சித்திரத்தை எடுத்துரைப்பதாகக் கவிதை அமைந்துள்ளது. தர்மம் சர்வ வியாபகமான சாந்தியை நிலவச் செய்யும் அந்தப் புது சுகத்தில், எதுவுமே விளையாத, எவ்வுயிரும் வாழத் துணியாத பனிமூடிய துருவப்பிரதேசங்கள் உருகிக் கரைந்து நீரும் நிலமு மாகக் காட்சியளிக்கும்; புல்பூண்டு கூட முளைக்காத நெடுந் பா. ஷெ–8 105