பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் ஷெல்லியும் முன்னுரை

  • 1... நன்மையும் அறிவும்

எத்திசைத் தெனினும், யாவரே காட்டினும் மற்றலை தழுவி வாழ்வீ ராயின் அச்சமொன் றில்லை....." 'தமிழச் சாதி' என்ற தலைப்பில், நமக்குக் கிடைத் துள்ள' அரைகுறையான பாட்டொன்றில் மகாகவி பாரதி மேற்கண்டவாறு கூறுகிறான்: இவ்வாறு கூறிய பாரதி ' நன்மையும் அறிவும் வழங்கும் பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் பலவற்றையும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினான்; அவற்றில் பலவற்றைக் கற்றுத் தெளிந்தான்; அவற்றில் காணக் கிடைத்த நல்ல பல கருத்துக்களைத் தேனீயைப்போல் திரட்டிச் சுவீகரித்துத் தனதாக்கிக் கொண்டான்; கவிதைகளைப் பொறுத்த வரை . யில் அவனே சில பிற நாட்டுக் - கவிதைகளைத் தமிழாக்கித் தந்தான்; சீன, ஜப்பானியக் கவிதைகள் சிலவற்றையும், அமெரிக்கக் கவி விட்மன் முதலானோர் கவிதைகள் சிலவற்றை. யும் தெரிந்து, அவற்றை நமக்கு அறிமுகப் படுத்தினான்; மேலும், அவனுக்கு ஆங்கில அறிவும் புலமையும் இருந்த - பா. ஷெ-2 - 9