பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரணத்தால், ஆங்கிலக் கவிஞர்கள் பலரையும் அவன் கற்றறிந்திருந்தான்; ஆங்கில நாட்டுக் கவிஞர் பெரு மக்களான ஷேக்ஸ்பியர், டென்னிஸன், வோர்ட்ஸ்வொர்த் முதலானவர்களை அறிந்திருந்தான்; ஆங்கிலக் கவிஞர்களில், குறிப்பாக, பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், சட்டத்தட்ட ஏககாலத்தில் தமது அழியாத கவிதைகளை ஆக்கிப் படைத்து, துர்ப்பாக்கிய வசமாக அற்பாயுளில் மாண்டுபோன கவிஞர்களான பைரன், கீட்ஸ், ஷெல்லி ஆகிய மூவரிடத்திலும் அவன் மிகுந்த ஈடுபாடு கொண் டிருந்தான்; இவர்களிலும் அவனுக்கு ஷெல்லியிடம் தான் மிகப்பெரிய ஈடுபாடும், கருத்தொற்றுமையும் இருந்தன; எனவே ஏனைய கவிஞர்களிடமிருந்து அவன் பெற்ற கருத்துக் களைக் காட்டிலும், ஷெல்லியிடமிருந்து பெற்ற கருத்துக் களே அவனது கவிதைகளில் அதிகமாகப் பிரதிபலித்துள்ளன. பாரதியையும் பிற நாட்டு இலக்கியப் படைப்புக்களையும் ஒப்புநோக்கிக் காண முனையும் இலக்கிய விமர்சகர்கள் பலரும் மேற்கூறிய உண்மைகளைப் பொதுவாக ஒப்புக் கொள்வார் கள், எனினும் பாரதியைப் பற்றிய இந்த ஒப்புநோக்கும் பணி தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மேற் கொள்ளப்படவில்லை. பாரதியிடம் காணக் கிடைக்கும் பிற - நாட்டுக் கவிஞர்களின் கருத்துக்கள். சாயல்கள் ஆகிய இவற்றைப் பற்றி, ஆங்காங்கே சிற்சில குறிப்புக்களைத் தொட்டுக் காட்டும் பத்திரிகைக் கட்டுரைகள் தாம் ஒரு சில வெளிவந்துள்ளன. இத்தகைய ஒப்பு நோக்கில் பாரதியையும் ஷெல்லியையும் ஒப்பு நோக்கிக் காண்பது மிகவும் முக்கிய மானதொரு கடமையாகும். எனினும் எனக்குத் தெரிய வந்த மட்டிலும், இந்தப் பணியில் இருவரது ஓரிரு தணிக் கவிதைகளை ஒப்பு நோக்கியும், இருவரையும் ஓட்டு மொத்தமாகப் பருந்துப் பார்வையில் ஒப்பு நோக்கியும் அ. சீனிவாசராகவன், வி, சச்சிதானந்தன், கே. ராமநாதன், நா. வானமாமலை ஆகியோர் எழுதியுள்ள சில பத்திரிகைக் கட்டுரைகள் தான் வெளிவந்துள்ளன. ஆனால் இந்தப் 2ணிக்கு இவை போதுமானவையல்ல. ஏனெனில், பாரதி