பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யின் இலக்கிய, சமூக, அரசியல், வாழ்க்கைக் கண்ணோட் டங்களை உருப்பெறச் செய்வதில் ஏனைய எந்தவோர் இலக்கிய கர்த்தாவைக் காட்டிலும், ஷெல்லிக்குத் தான் அதிகமான , கணிசமான பங்குண்டு என்பது இருவரது படைப்புக்களையும் ஊன்றிப் படித்தவர்கள் உணரக்கூடிய செய்தியாகும், சொல்லப்போனால், இந் த க் கவிஞர்களது வாழ்க்கை , வாழ்ந்து வளர்ந்த காலச் சூழ்நிலை, அதில் படைத்த படைப் புக்கள் , உருவான கண்ணோட்டங்கள் ஆகியவற்றை விரிவாக ஆராய்ந்து, அவற்றின் ஒற்றுமைகளை-வேற்றுமைகளையும் கூடத்தான்-கண்டுரைத்து, ஒரு முழுமையான பெரு நூலையே உருவாக்கலாம்; அதற்கான " சரக்குக்கும் பஞ்ச மில்லை, அத்தகையதொரு நூல் நமக்குத் தேவைதான் என் ஐலும், அதற்கொரு முன்னோடியாக விளங்கும் வகையில், மேற்குறிப்பிட்ட பல்வேறு அம்சங்களை யும் எனது இலக்கிய நோக்கில் பரிசீலித்து, இருவருக்குமுள்ள ஒற்றுமை வேற். அழைகளைச் சுட்டிக் காட்டுவதே இந்தச் சிறுநூலின் நோக்கம். ஷெல்லியைப் பற்றி பாரதி பாரதி தனது இருபத்திரண்டாவது வயதில் சென் னைக்கு வந்து, பத்திரிகைத் துறையில் ஈடுபட்டு, இந்திய நாட் டின் தலைசிறந்த தேசிய கவியாக மலர்ச்சி பெறுவதற்கு, முன்பே, எட்டயபுரத்து ஜமீன்தாரின் ஆதரவில். அவன் இருந்த காலத்திலேயே, ஷெல்லியிடம் அவனுக்கு மிகுந்த "ஈடுபாடு இருந்ததாக அவனைப்பற்றிய வாழ்க்கை வரலாறுகள் குறிப்பிடுகின்றன. “அப்போது அவருக்கு ஷெல்லி, பைரன் முதலிய ஆங்கிலக் கவிகளின் நூல்களை வாசிப்பதில் பிரியம் அதிகம். அந்தக் காலத்தில் அவர் " ஷெல்லிதாசன்' என்னும் புனை பெயரில் பத்திரிகைகளுக்கும் சில வியாசங்கள்கூட எழுதியதுண்டு” எனப் பாரதியின் மனைவி செல்லம்மா பாரதி குறிப்பிடுகின்றார் (பாரதியார் சரித்திரம்), பாரதி. சக்திதாசன்', 'காளிதாசன்' என்ற புனைபெயர்களில் தனது ' படைப்புக்கள் பலவற்றை எழுதி வந்துள்ளான் என்பதை நாமறிவோம். ஆனால், அவன் சக்திக்கும் காளிக்கும் தாச 11