பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னாவதற்கு முன்பே, ஷெல்லிக்குத் தாசனாக இருப்பதில் பெருமை கொண்டிருக்கிறான் (பாரதி முதன் முதலாக ஆசிரியப் பதவியேற்று நடத்தி வந்த "சக்ரவர்த்தினி என்று மாதப் பத்திரிகையின் சில இதழ்கள் அதிருஷ்டவசமாக எனக்குக் கிட்டின. இச் சஞ்சிகையின் 1908 ஜூலை (தொகுதி 1, பகுதி 12) இதழில் பாரதி எழுதிய 'துளஸீபாய் சரித் திர' 'த்தின் இறுதிப் பகுதி இடம் பெற்றுள்ளது. இதனடியில்

    • ஷெல்லிதாஸ் எனக் கையொப்பமிடப் பெற்றுள்ளது.

பாரதி * 'ஷெல்லிதாசன்' என்ற புனை பெயரில் எழுதி வந்தான் என்பதற்கு இதுலே நமக்குக் கிட்டியுள்ள ஒரே நேரடியான சான்றாக விளங்குகிறது எனலாம்). இளமை யிலேயே ஷெல்லியிடம் ஈடுபாடு கொண்ட பாரதி. தான் எட்டயபுரத்தில் இருந்த காலத்தில் 'ஷெல்லியன் சங்கம் " {Shelleyan Guild) என்ற பெயரில் ஒரு சங்கத்தை ஏற்படுத்தி யிருந்ததாகவும் நாம் அறிகிறோம். * 'ஷெல்லி, கீட்ஸ் இவ் விரு கவிவாணர் மீதுதான் அவர் அளவற்ற மதிப்பு வைத்: திருந்தார். அவர் தமது ஊரில் ஓர் சங்கம் ஏற்படுத்தி, அச் சங்கத்தில் உள்ளோருக்கு ஷெல்லியின் நூல்களைப் படித்துக் காண்பித்து, அனுபவிக்கும்படிச் செய்து வந்தார் என்று பாரதியின் வரலாற்றை எழுதிய முன்னோடிகளில் ஒருவரான ஆக்கூர் அனந்தாச்சாரி குறிப்பிடுகிறார் கவிச்சக்கரவர்த்தி சுப்ரமண்ய பாரதி சரிதம்). பாரதியையும் ஷெல்லியையும் பற்றிய இந்தக் குறிப்புக்களைத்தவிர, பாரதியின் எழுத்துக் களிலேயே ஷெல்லியைப் பற்றிய சில குறிப்புக்கள் தென்படும். இன்றன. 'காந்தா மணி' என்ற தலைப்பில் பாரதி எழுதி யுள்ள சிறுகதையொன்றை அவன் பின்வருமாறு தொடங்கு கிறான் (பாரதி தமிழ்: தூரன்): “லெயி லொளி எந்தப் பொருள் மீது பட்டாலும், அந்தப் பொருள் அழகுடையதாகத் தோன்றுமென்று ஷெல்லி என்ற ஆங்கிலக் கவிராயன் சொல்லுகின்றான். எனக்கு எந்த நேரத் திலும் எந்தப் பொருள்களும் பார்க்க அழகுடையனவாகத் தோன்றுகின்றன.” ஷெல்லியின் 'எபிசைக்கிடியான்' {Epipsychiidian) என்ற அற்புதமான காதற்கவிதையில் காணப்படுகின்ற, 12