பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோயும் நொடியும் மனித உடம்பிலிருந்து நீங்கி மடிந்தன. இளமையும் ஆரோக்கியமும் உடம்பில் குடி கொண்டன, துரிலும், உயர்ந்த சித்தமும் இதயத்தில் உருவே றின, மனித ஆத்மாக்களின் பரஸ்பரமான பரிவுணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த, கொடுங்கோன்மையான சட்டதிட்டமென்ற விலங்குகள் தேவைப்படவில்லை. அங்கு ஆணும் பொண்ணும் நம்பிக்கையோடும் அன்போடும் சுதந்திரமாகவும், சமத்துவ மாகவும், புனிதமாகவும் நடமாடினார்கள். ஃபஞ்சத்தின் மங்கிய உனகலும், வறுமையின் மோனக்கண்ணீரும் அங் கிருந்து மறைந்தன. சினறக்கூடங்களும், தேவாலயங்களும் நாதியற்று அழிந்தன. இவ்வாறாக, மனித ராசிகள் பற்றி பூரணத்துவம் எய்தின. தனது தாயின் அன்பின்கீழ் வளரும் குழந்தையைப்போல், உலகமானது 7 ல் ல ர - மேன்மையோடும் புலம்பெற்றது;. ஆண்டுக்காண்டு மேன் மேலும் அழகோடும், மேன்மையோடும் வளர்ச்சி பெற்றது (வரிகள் 334--137): (Thurs hutnaan things were perfected, and earth Even as a child beneats 1<s mother's love | YWas strengthened in all excellence and grew Fairer and nobler with each passing year). - மேற்கண்ட பொற்காலக் கனவு பற்றிய கருத்துக்களின் அடிப்படையில்தான் ஷெல்லி தனது ஏனைய கவிதைகளிலும் அதன் சித்திரத்தை மேலும் அழகும், மெருகும் ஊட்டித் தீட்டியுள்ளான் , 'இஸ்லாமின் புரட்சி' யில் அவன் காணும் புதிய உலகமும், 'கட்டறுந்த பிராமித்தியூலில் அவன் வெளி யிடும் பிராமீத்தியன் உலகமும், 'ஹெல்லா ஸில் அவன் காணும் புதிய ஹெல்லாசும் இதே கருத்துக்களைத்தான் சிறந்த கவிதை நயத்தோடு தெரிவிக்கின்றன என்று சொல்லலாம். , ஷெல்லியின் பொற்காலத்துக்கும், பாரதியின் கிருத சுகத்துக்குமுள்ள ஒற்றுமையைத் தெரிந்து கொள்ள இங்கு நாம் சில விஷயங்களை நினைவூட்டிக் கொள்ளவேண்டும், நாஸ்திகனான ஷெல்லி நரகத்தையும், சொர்க்கத்தையும், 109