பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களை யும் தேவதா ரூபமாகக் கண்டு வணங்கும்படிக்கும் விதி மண்டா னால் அதுதான் கிருதயுகம்” ('சும்மா'-பாரதியார் கதைகள்}.. இவ்வாறு கிருத யுகத்தை வரவேற்கும் பாரதி அந்தக் கலி யுகம் பஞ்சாங்கக் கணக்குப்படி லட்சோப லட்சக் கணக்கான வருஷங்கள் கழித்து வரப்போவதாகக் கருதவில்லை, மாறாக, அந்த யுகம் சீக்கிரமே வரும் என்றே நம்புகிறான். இதனைத் தனது 'ஞானரத' த்தில், தர்ம லோகத்திலுள்ள கண்வாசாரி யாரின் வாய்மொழியாகப் பின்வருமாறு கூறுகிறான்: < * பாரத நாட்டில் இப்போது கலியுகம். ஆனால் இன்னும் இரண்டு மூன்று தலைமுறைகளில் கலியுகம் நீங்கிக் கிருத யுகப் பிறக்கப் போகின்றது.* பாரதி கிருதயுகம் அதிக தூரத்தில் இருப்பதாகக் கருதவில்லை, எனவே அந்த யுகத்தை விரைவில் கொணர் வேண்டும் என்று வேட்கை கொள்கிறான். தெய்வ நம்பிக்கை யுள்ளா டபாரதி தனது “விநாயகர் நான்மணி மாலையில் தெய்வத் திடம் பின்வருமாறு வேண்டிக் கொள்கிறான் : பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்; கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன், மன்மதுல்: ST மக்கள், பறவைகள் ஒகி லங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள், u):42ம் என்வினையால் இடும்பை தீர்ந்தே இன்பமுற்று அன்புடன் இவாங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும்...........

  • பூமண்டலத்தில் அன்பும் பொறையும்

விளங்குக; துன்பமும், மிடிமையும், நோவும் சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம் இன்புற்று வாழ்க!” என்பேன். இதனை நீ திருச்செவி கொண்டு திருவு6ாம் இரங்கி

  • அங்ஙனே ஆகுக!' என்பரய் ஐயனே!

(பாட்டு. 32) கிருதயுகம் தோன்றவேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டுகின்ற பாரதி, அதற்கு ஆண்டவனின் அருளும் கிட் 1 22