பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. மனித உணர்ச்சிகள், காதல், கொஞ்ச நஞ்சமுள்ள சுதர் திரம், காதல் நுகர்ச்சிக்குத் துணை செய்யும் மனித உடல் எல்லாமே விலை சாட்டப்படுகின்றன. இதனால் காதல் விலைப் பொருளாகிவிபசாரமாகிறது: விபசாரத்தால் முதியவர்களும் இளையவர்களும் தீராத நோய்க்கு ஆளாகிறார்கள்; இன்பத்தை நf{ டி, இன்பமும் பெருமல் துன்பத்தையே பரிசாகப் பெறு கிறார்கள் என்றெல்லாம் ஷெல்லி மேற்கண்ட பகுதியிலே கூறுகின்றான். இவ்வாறு காதலும், காதலுக்குரிய பெண் மக்களும் வியாபாரப் பண்டமாக மாறிய நிலை அழியவேண்டும் என்றே அவன் விரும்புகிறான். அதற்குப் பெண் விடுதலையும் ஆண் பெண் சமத்துவமும் தவிர்க்க முடியாத தேவைகள் ஆகும் என்பதையும் அவன் காண்கிறான். ஷெல்லியின் தத்துவ தரிசனத்தை உருவாக்குவதில் வில்லியம் காட்வினுக்குக் கணிசமான பங்கிருந்தது என்று முன்னர் பார்த்தோம். காட்வின் பெண் விடுதலையையும் ஆண் பெண் சமத்துவத்தையும் பெரிதும் வற்புறுத்தியவர். ஆண் பெண் சமத்துவத்திலும் உறவிலும் பரஸ்பரம் எந்த விதமான கட்டுத் தளைகளும் இருக்கக்கூடாது என்றும் கருதி யவர். காட்வினைட்டர் போன்று பெண் விடுதலை, ஆண் பெண் சமத்துவம் ஆகிய கோட்பாடுகளில் அழுத்தமான நடிப்புக் களைக் கொண் டி.ருந்த பெண்மணிதான் முதலில் காட்வினின் காதலியாகவும், பின்னர் சட்டபூர்வமான மனைவியாகவும், ஷெல்லியின் இரண்டாம் மனைவியான மேரியின் தாயாகவும் விளங்கிய மேரி உல்ஸ்டோன்கிராப்ட் (Mary Wollstone- craft) என்பவர். இவர் மேரியைப் பெற்றெடுத்த பிரசவ காலத்திலேயே மாண்டு போய்விட்டார். ஆங்கில நாட்டில் பெண் விடுதலைக்காகப் போராடிய முதற் பெண்மணி இவர் தான் என்று சொல்வார்கள். இவர் காட்வினைக் காட்டிலும் கூட, பெண் விடுதலை பற்றித் தேர்ந்த, தெளிவான கருத்தும் களைக் கொண்டிருந்தார் என்று சொல்லவேண்டும், இவர் தமது சொந்த வாழ்க்கையில் பல இன்னல்களை அனுபவித்த வர்; சுயபலத்தை நம்பியே பலகாலும் வாழ நேர்ந்த சூழ் நிலைக்கும் ஆளானவர். எனவே இவரது கருத்துக்கள் அறிவி லிருந்து உதயமா எனதைக் காட்டிலும், அனுபவத்திலிருந்தே 1 25