பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறாள். பெண்ணுக்கு வீட்டிலும் நாட்டிலும் பரிபூரண விடுதலையும் சமத்துவமும் வேண்டுமென அவள் மூலம் தெரிவிக்கின்ற ஷெல்லி அவளை உறுதியான, வைர நெஞ்சம் கொண்ட ஒரு வீராங்கனையாக மட்டும் காணவில்லை. அதே வீராங்கனை ஜன்பின் கீணிவிவே உருகும் பெண்ணாங்கா கவும், எளிமைத் தன்மை கொண்ட குழந்தை:).:ாகவும் காட்சி தருகிறாள். இவ்வாறே ஷெல்லியின் பல்வேறு கவிதைப் படைப்புகளிலும் இடம் பெறும் வேறு சில பெண் பாத்திரங் களும் சித்ரூவைப் போலவே பெண் விடுதலை லட்சியத்தை எதிரொலிக்கிறார்கள் என்பதையும் நாம் பரக்கக் காண முடியும், எனினும் பெண் விடுதலை பற்றிய அவனது கருத்துக் கள் “இஸ்லாமின் புரட்சியில்தான் பெரிதும் இடம் பெற்றுள் என, அவற்றில் சிலவற்றைத்தான் மேலே பார்த்தோம். ஷெல்லியைப்போலவே பாரதியும் பெண் விடுதலைக்காகப் மோ?ராடிய கவிஞன்" என்பதை நாமறிவோம் , இவ்விஷயத்தில் பாரதிக்கு ஷெல்லியுடன் டெமரிதும் உடன்பாடுண்டு என்ப தோடு மட்டுமல்லாமல், பெண் விடுதலை பற்றிய சில கருத்துக் களை அவன் ஷெல்லியிடமிருந்து சுவீகரிக்கவும் செய்தான்; ஷெல்லியின் நேர்முகமான எதிரொலிகளைக்கூட நாம் பாரதி யிடம் அாணமுடியும் என்றும் கூறலாம். இந்திய நாட்டிலும், தமிழகத்திலும் ஈஸ்வர சந்திர வித்தியாசாகரர், ராஜாராம் மோகன ராய், மாயூரம் வேதநாயகம்பிள்ளை முதலிய பலரும் பாரதிக்கு முன்பே பெண் விடுதலைக்காகவும், பெண் கல்விக் காகவும், பாடுபட்டு வந்திருக்கிறார்கள். அவர்களது பரம்பரை யில் நின்று, இந்தியப் பண்பாட்டின் சிறந்த அம்சங்களையும் தனதாக்கிக் கொண்ட பாரதி, பெண் விடுதலையைப் பற்றிய தனது கருத்துக்களைத் தெரிவிக்கிறான், எனினும் புரட்சிப் புலவஞான பாரதி உருவாக்கிக் காட்டும் புதுமைப் பெண் இந்திய மண்ணில் அதற்கு முன் வேறு எவரும் உருவாக்கிக் காட்டாத படைப்பாகும்; சொல்லப் போனால், பாரதியின் புதுமைப் பெண் பல்வேறு அம்சங்களிலும் ஷெல்லி படைத்த சித்னாவின் வாரிசு என்றே கூறவேண்டும் . ஷெல்லியைப் போலவே பாரதியும் பெண்ணடிமைத்தனம் நிலவும் சமுதா 138