பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆணும் பெண்ணும் சமமாக வாழாவிட்டால், வீட்டில் அமைதி இராழி, வாழ்க்கை சிறக்காது என்று வியான் கூறு கிறான் , அதனைப் பாரதியும் ஆதரிக்கிறான், - பொன்ணுக்கு விடுதலை நீர் இல்லை யென்றால் பின்னிந்த உலகினிலே உரழ்க்கை இல்லை என்றும், பெண்டாட்டி தனையடிமைப் படுத்த வேண்டிப் பெண் குலத்தை முழுதுமைப் மடுத்தலாமோ? என்றும், த? ய்க் குலத்தை முழுதடிமைப் படுத்தலாமோ? தாயைப் போலே பிள்ளை' என்று முன்னோர் வாக்குனர் தன்னோ? யெண்மை அடிமைபற்றால் மக்களெல்லாம் அடிமையுறல் வியப்பொன்றானோ? {பாரதி அறுபத்தாறு, பாடல் 45, 46, 47} என்றும் அடுக்கிக் கூறுகிறான் பாரதி. இதனையே அவனது புதுமைப் பெண் , , ' மாட்டை யடித்து விசக்கித் தொழுவில் மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே, வீட்டினில் எம்மிடம் காட்ட வந்தார்--இதை வெட்டி விட்டோ மென்று கும்மியடி! (பெண்கள் விடுதலைக் கும்மி 3) என்று கும்மியடித்து முழக்கமிடுகிறாள். இவ்வாறு புதிய ஞானம் பெறும் புதுமைப் பெண் அறிவிலும் ஞானத்திலும் சிறந்து நிற்கவும் செய்கிறாள், ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கி இவ்வையம் தழைக்குமாம்; நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம். 145