பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலத்தின் தன்மை பயிர்க்குனா தாகுமாம்; நீசத் தொண்டும் மடமையும் கொள்ள 4 தாய் தலத்தில் (Dாண்புயர் மக்களைப் பெற்றிடல் சாலவே அரிதாவதோர் செய்தியாம்! (புதுமைப் பெண் 5) அடிமைப்பட்ட, அறிவீனம் நிறைந்த பெண் மக்கள் வயிற்றில் எப்படி வீரர்கள் பிறக்க முடியும்? எனவே அறிவும் வீரமும் நிறைந்த பெண்கள் தான் ஆண்மைமிக்க மக்களையும் ஈன்று தரமுடியும் என்கிறான் பாரதி. உயிரும் உணர்ச்சியு முள்ள பெண்களைச் சமாதிக் குழியில் சிதைய விடுவதுபோல் அழிய விட, லாமா என்று சித்னா கேட்கிறாள். பாரதியின் புதுமைப்பெண் அதே போன்று, அறிவு கொண்ட மனித உயிர்களை அடிமையாக்க முயல்கவர் பித்தராம்! (புதுமைப் பெண் 3) என்று சுட்டிக் காட்டுகிறாள். "இஸ்லாமின் புரட்சி'யில் வரும் யானும், சித்னாவும் பெண்களின் அறிவை வளர்க்கவேண்டும், சமூகத்தின் செம் பா தியான பெண் மக்களின் இழிநிலையைப் போக்கவேண்டும், ஆணுக்கும் பெண்ணுக்கும் சமத்துவம் வேண்டும் என்றெல் லாம் கருதுகிறார்கள். பாரதியும் இதே கருத்துக்களை ஆதரித்துப் பேசுகிறான்; பெண்ணின் அறிவை வளர்ப்பது அவசியம் என்பதைப் பின்வருமாறு வற்புறுத்துகிறான், பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்--புவி பேணி வளர்த்திடும் ஈசன் மண்ணுக் குள்ளே சில மூடர்-நல்ல , - மாதர் அறிவைக் கெடுத்தார், கண்கள் இரண்டினில் ஒன்றைக்-குத்திக் காட்சி கெடுத்திட லாமோ? பெண்கள் அறிவை வளர்த்தால் --வையும் பேதைமை அற்றிடும் காணீர். (முரசுப் பாட்டு. 9, 10). 144