பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஷெல்லியின் சித்னா தன்னைக் கடவுளின் குழந்தை என ஊரார் சொல்வதாகக் குறிப்பிடுகிறாள். பராசக்தியிடம் பக்தி கொண்ட பாரதிக்கோ , அந்தப் புதுமைப்பெண் பரா சக்தியின் அவதாரமாகவே தோன்றுகிறள், மேலும் லயானையே தனது அறிவினாலும் ஆற்றலினாலும் இயங்கவைக் கும் சித்னாவைப்போல், பாரதியின் புதுமைப்பெண்ணும்

  • * மனிதர் தம்மை அமரர்களாக்கும் வலிமை பெற்றவளாக

விளங்குகிறாள். ஷெல்லி தனது புதுமைப் பெண்ணின் குரல் இனிமையையும் பேச்சின் வலிமையையும் பலபடப் பாராட் டிப் பேசுவது போலவே பாரதியும் பேசுகிறான். சித்னாவின் குரலும் மொழியும் இருளில் பளிச்சிடும் ஒளியாகவும், வானை யும் கடலையும் நிறைக்கும் பறறைப யின் சங்கீதமாகவும், இந்த உலகத்தைச் சேராத இனிய இசையாகவும் ஷெல்லிக்குத் தோன்றின. பாரதியோ தன் புதுமைப் பெண்ணின் குரலை யும், மொழியையும் பின்வருமாறு பாராட்டுகிறான்: மாதர்க் குண்டு சுதந்திரம் என்று நின் வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல் நாதம் தானது நாரதர் வீணையேர்? நம்பிரான் கண்ணன் வேய்ங்குழல் இன்பமோ? வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே மேன்மை xெ;'தெமைக் காத்திடச் சொல்வதோ? சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ?... (புதுமைப் பெண் 23 பெண் அடிமையாக இருந்தால், ஆண் பட்டும் சுதந்திர மாக இருக்க முடியுமா? மிருகங்களாகக் கருதப்படுபவர்களை மனைவியாகக் கொண்டவர்களிடம் ஆண்மை இருக்குமா? அடக்குமுறையையும், அநியாயத்தையும் எதிர்த்துப் போரிட, முடியுமா? அவர்கள் வீட்டிலுள்ள குழந்தையுமல்லவா பெண் பிறவி என்ற சாபத்தைச் சுமந்து கொண்டிருக்கும்!-என் றெல்லாம் சித்னா லயானிடம் கூறுகிறாள். இதனையே பாரதி தனது புதுமைப் பெண்ணின் கூற்றாக நமக்குப் பின்வருமாறு அறிவுறுத்துகிருன்: 143 -