பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் இன்பத்தை அனுபவிப்பதில் காதலர்களுக்கிடையே கட்டுப்பாடு கூடாது என்ற அளவுக்கு, அவனது விடுதலைக் கருத்து ஏற்கத்தக்கதே என்று சொல்லவேண்டும், ஆனால் அதன் பெயரால் பல காதலுக்கும் பல காதலர்களுக்கும் வழி பிறக்கும்17யின் அது சமுதாயப் பொறுப்பற்ற தீங்காகவே முடியும், எனவே, திருமண பந்தமும் காதல் "வாழ்க்னகயும் முரண் படாத விதத்தில், சமுதாயத்தில் நல்ல சூழ்நிலைகளும், ஞானமும், பரஸ்பர நம்பிக்கையும் நிலவ வேண்டும் என்பது தான் சரியரன கருத்தாக இருக்கமுடியும். ஆனால் இந்த முடிவுக்கு ஷெல்லி வராததால், காதலைப் போற்றிப் புகழும் அந்தக் கவிஞன் தன்னையறியாமலே தலை கால் தெரியாத ஓர் அராஜகவாதப் போக்குக்கு வழி திறந்து விட்டு கிடுகிறான்; தனது காதல் லட்சியத்தில் தவறும் இழைத்துவிடுகிறான், ஷெல்வியும், காட்வினும் திருமண பந்தத்தை நிராகரித்தவர்கள்தாம். எனினும் இந்தக் குருவும் சீடனும் இருமுறையும் முறைப்படி திருமணம் செய்து கொள்ளத்தான் செய்தார்கள். ஷெல்லி திருமணம் செய்து கொள்ளாமல் ஹாரியெட்டைக் 8:டத்திக் கூட்டிச் சென் றான்; எனினும் இரண்டு மூன்று ஆண்டுகளில் அவளைத் திருமணம் புரிந்து கொண்டான்; பின்னர் அவன் மேரி யையும் கூட்டிக்கொண்டு போனான்; ஹாரியெட்டின் மரணத்துக்குப் பின்னர் அவளையும் திருமணம் புரிந்து கொண்டான், இத்தகைய விடுதலைக் காதல் லட்சியத் தைக் கொண்டிருந்த காரணத்தாலேயே, அவன் தனது இருபத்திரண்டாவது வயதுக்குள்ளாகவே முதல் மனைவியை விடுத்து, இரண்டாம் மனைவியைத் தேடுவதற்கும் துணிந்தான் என்றும் சொல்லலாம்; மேலும் தனது இறுதிக் காலத்தில் எமிலியாவின் மீதும் ஆத்மார்த்தன் 'காதல் கொண்டு, அது வெற்றி பெறுமுன்பே தோற்றான் என்றும் பார்த்தோம். ஷெல்லி வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்த ஷெல்லியின் நண்பனும் கவிஞனுமான லார்டு பைரன், கண்ட கண்ட பெண்களோடெல்லாம் காதல் களியாட்டம் நடத்தும் விபசார வாழ்க்கையையே மேற்கொண்டி ருந்தான்; தனது அழகையும் புகழையும் கண்டு, தன்னை மோகித்து நாடிய எந்த 152 -