பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வொரு பெண்ணை யுமே அவன் புறக்கணித்ததில்லை. அதே சமயம் விடுதலைக் காதல் பேசிய ஷெல்லி இத்தகைய விபசார வாழ்க்கையில் ஈடுபடவில்லை ஷெல்லி, காதலைப் போற்றினான்; அதனை அவன் மனிதனை அமரனாக்கும் மகாசக்தி எனக் கருதினான். எனினும் அவனது விடுதலைக் காதல் லட்சியமும், அவனது இரு திருமணங்களும் அவனுக்குச் சமுதாயத்தில் கெட்ட பெயரைத்தான் சம்பாதித்துக் கொடுத்தன. அவனது வாழ்க்கையே அவனது காதல் லட்சியத்துக்கு முரண்பட்ட தாகவும், விடுதலைக் காதல் மார்க்கம் அராஜகப்போக்குக்குத் தான் அனுமதியளிக்கும் என்பதைப் புலப்படுத்துவதாகவும் அமைந்து விட்டது, எனவேதான் இந்த விடுதலைக் காதல் லட்சியம் பிற்காலத்தில் விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தி யது. கட்டுப்பாடுகளையே விரும்பாத அராஜக வாதிகள் கள்ளையும் காமத்தையும் எந்தவிதமான கட்டுப்பாடுமின்றி, அனுபவிக்க முனையும் ஒரு போக்கை உருவாக்கிவிட்டார்கள். பொதுவுடைமைப் புரட்சி நடந்த ருஷ்ய நாட்டில் கூட்டி அந்தக் காலத்தில் பொதுமையின் பெயரால் அராஜக வாதிகள் விடுதலைக் காதல் பேசி, சமூகத்தையே விபசார விடுதியாக்க முனைந்தார்கள் என்றும் பார்க்கிறோம், தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்தி அதனைத் தணிப்பது போல், விரகதாபம் தோன்றினால், அப்போது ஆணும் பெண் ணும் எங்கேனும் வர்ஜாவர்ஜமின்றி யாரோடு வேண்டு மானாலும் கூடிக்கலந்து அதனைத் தணித்துக் கொள்ளலாம் என்று அவர்கள் “ நியாயம்' பேசினார்கள். ஆனால் இத்தகைய அராஜகவாதப் போக்கை லெனின் வன்மையாகக் கண்டித் தார், திருமதி கிளாரா ஜெட்கின் எழுதியுள்ள லெனின் பற்றிய நினைவுக் குறிப்புக்களில் இந்த நியாயத்துக்கு லெனின் கொ டுத்த சவுக்கடி இடம் பெற்றுள்ளது. இது சம்பந்தமாக கிளாரா ஜெட்கின்னிடம் லெனின் இவ்வாறு கூறினார்: 11 இந்தத் தண்ணீர்க் கோப்பைக் கொள்கை முற்றிலும் மார்க்சிய விரோதமானது, மேலும் சமூக விரோதமானது என்றே நான் கருதுகிறேன். உடலுறவு வாழ்க்கையில் வெறும் இயற்கையை மட்டும் கருதிப் பார்க்கக்கூடாது. கலாசாரத் தன்மைகளையும்- அவை தரம் உயர்ந்தனவா, தரம் தாழ்ந் பா. ஷெ-11 153