பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கையையும், ஆண் பெண் கற்பு நிலையையும் போற்றி னான். அதே சமயம் பொருந்தா மணத்தைப் போற்றாத Abாரதி, பொருந்தாது போய்விட்ட மண வாழ்க்கையையும் ஆதரிக்க வில்லை. "மனைவாழ்க்கை ஒருவனும் ஒருத்தியும் நீடித்து ஒன்றாக வாழாவிட்டால் தகர்ந்து போய்விடும்” என்று மேற் கூறிய கட்டுரையில் மேலும் குறிப்பிடுகின்ற பாரதி, 'பெண் விடுதலை-2' (கட்டுரைகள்: மாதர்) என்ற கட்டுரையில், “பெண்களுக்கு விடுதலை கொடுப்பதில் இன்னும் முக்கியமான ஆரம்பப்படிகள் எவையென்றால் என்று குறிப் பிட்டு, பத்து விதிகளை நிர்ணயிக்கிறான், அவற்றி முதன்மை யானவை பின்வருமாறு: • *1. பெண்களை ருதுவாகு முன்பு விவாகம் செய்து கொடுக்கக்கூடாது. 2. அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தல் கூடாது. 3. விவாகம் செய்து கொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடம் கொடுக்கவேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது.* ' எனவே குடும்ப வாழ்க்கையின் அவசியத்தையும், கற்பு நிலையின் அவசியத்தையும் வற்புறுத்துகின்ற பாரதி, மன வாழ்க்கை பொருந்தாவிட்டால் விவாக ரத்துச் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்றே கருதுகிறான். இதனால் ஷெல்லியின் விடுதலைக் காதலை ஏற்காத பாரதி, பெண் விடுதலையையும் மணவாழ்க்கையையும் காதல் வாழ்க்கை யையும் பற்றி, ஷெல்லியைக் காட்டிலும் தெளிவான, திட்ட வட்டமான, சமுதாயப் பொறுப்புணர்ந்த, அத்துடன் தனி மனித உணர்ச்சிகளையும் மதிக்கத் தெரிந்த ஒரு கண்ணோட் டத்தைக் கொண்டிருந்தான் என்பதைக் காண்கிறோம்.