பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பே ஆயுதம் ஷெல்லி மன்னர்களின் கொடுங்கோன்மையையும் மத குருக்களின் இரக்கமற்ற ஆதிக்கத்தையும் எதிர்த்தான்; பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு குமுறினான்; தொழிலாளி மக்கள், ஏழை மக்கள் ஆகியோர் சுரண்டலுக்கு ஆளாகி, அடிமைத்தனத்திலும் வறுமையிலும் வாடுவதைக் கண்டு ஆத்திரம் கொண்டான்; பீட்டர்லூ சம்பவத்தின்போது நேர்ந்த படுகொலையைக் கண்டு, இங்கிலாந்து மக்களைத் தட்டியெழுப்பும் வண்ணம் பாடல் கள் பாடினான். இவ்வாறு அநீதியையும் அக்கிர மத்தையும் கண்டு குமுறி, அவற்றை ஒழித்தாக வேண்டும் என்று தர்மாவேசம் கொண்ட ஷெல்லி, இவற்றை ஒழிப்பதற்குப் பலாத்காரமான வழிகளைக் கையாள்வதை ஆதரிக்கவில்லை, பகையைப் பகையால், பலாத் காரத்தைப் பலாத்காரத்தால் வெல்லவேண்டும் என்று அவன் கருதவில்லை. மாறாக, அவன் அவற்றையெல்லாம் ஒன்றுபட்ட சக்தியாலும், உறுதிவாய்ந்த அன்பு மார்க்கத் தாலும்தான் வெற்றி காணவேண்டும் என்று கருதினான்; அதுவே சாத்தியம் என்றும் நம்பினான். பகைமையைக் குறித்து , ஷெல்லி எத்தகைய கண்ணோட்டம் கொண் டிருந்தான் என்பதை ஆர்ச்பால்டு ஸ்ட்ராங் என்ற விமர்சகர் பின்வருமாறு எழுதுகிறார்: * * சுதந்திரத்துக்கான அவனது வேட்கையையும், அடக்குமுறையின் மீது அவன் கொண்ட வெறுப்பையும் காணும் அதே நேரத்தில் 158