பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லாம். அவனது '* இஸ்லாமின் புரட்சி' யின் கதாநாயகன் கார் கொடுங்கோ! லரின் தாக்குதலுக்கு ஆளானபோதும், அந்தப் பலாத்காரத்துக்கெதிராகப் பலாத்காரத்தைப் பிரயோகிப் பதைத் தடுத்து, பின்வருமாறு பேசுகிறான்: “'என்ன கார ணத்துக்காகத் தீமையிலிருந்து தீமையே பிறந்து பாயவேண் டும் ? வேதனையானது மேலும் கொடிய வேதனையை ஏன் உற்பத்தி செய்யவேண்டும்? நாம் எல்லோரும் சகோ தரர்கள்; கூலிக்காகக் கொலை செய்யும் அடிமைகளும் கூட, மனிதர் கள் தாம்” (சருக்கம் 5, பாடல் 11): {Oh wherefore should 1]! ever flow from it And pain sti11 keener pain for ever breed?" We are all brethren-even the slaves who kill - For hire, are men,,.) அதே நூலில், அவன் பின்வருமாறு பேசுகிறான்: “நீங்கள் எதை நியாயம் என்கிறீர்கள்? அடுத்தவனுக்கு அந்தரங்க எண்ணத்திலேனும் என்றும் தீமை கருதாத ஒருவன் இருக் கின்றானா? நீங்கள் எல்லோரும் புனிதமானவர்களா? இதனைக் கேட்பவர்கள் எல்லாம் நடுங்காமல் நிமிர்ந்து நிற் கட்டும். அவர்கள் அப்படிப்பட்டவர்களானால், அவர்கள் அவமானப்படுத்திச் கொல்லத் துணிவார்களா? அவர்களது இளகிய கண்களில் ஒரு மாய்மாலக்காரனின் பொய்யான கோபக் குறியை அவர்களால் நிரப்ப முடியுமா? அந்தோ ! அப்படிப்பட்ட வர்கள் புனிதமானவர்களல்ல. தருமத்தின் 1.னிதப்படுத்தப்பட்ட மனோவுறுதியானது நீதியை அன்பின் ஒளியாகத்தான் காண்கிறது: பழிக்குப் பழியாகவோ, பயங் கர மாகவோ, குரோதமாகவோ காணவில்லை ('சருக்கம் 5, பாடல் 34): (What call ye Justice? Is there one who ne' er In secret thought has wished arother's ill? - Are ye all pure? Let those stand forth who hear And tremble not. Shat they insult and ki!! If such they be? thei: nild eyes can they fi1 With the false ange? of the hypocrite? 18!