பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Alas, Such were not pure,-the clhastened wi11 Of virtue sces that justice is the light : of love, and not revenge, and terror and despite) : இதன்மூலம் ஷெல்லி பலாத்கார மா ன கொடுங்கோன் மையைக் கூட, சாத்வீகமான எதிர்ப்பின் மூலம் எதிர்த்து முறியடிக்க முடியும் என்றும், அன்பே அதற்கான ஆயுதம் என்றும் கருதுகிறான் என்பதை நாமறியலாம். இவ்வாறு ஷெல்லி - கருதுவதற்கு என்ன காரணம் என்பதை, ஆர்ச் பால்டு ஸ்ட்ராங்! மேற்குறிப்பிட்ட தமது நூலில் பின்வரு மாறு விளக்குகிறார்: 'வாழ்க்கையில் தீமை என்பது முதற் பட்சமான யதார்த்தமல்ல, இரண்டாம் பட்சமானதுதான் என்றும், மனித இதயம் அதன் இயல்பில் நல்லதுதான் என் றும், தயை, சகோதரத் தன்மை ஆகியவற்றின் பொன்னான தொரு பூர்ணத்துவத்தை உணர்ந்து புரியும்படி அதனை விழிப் பூட்டுவதே அவசியம் என்றும், மானிடம் அல்லது பிரபஞ்சம் ஆகிய எல்லாவற்றின் வாழ்நிலைக்கும் அன்புதான் அடிப் படைத் தத்துவம் என்றும் ஷெல்லி முழுமனத்தோடும் நம்பி னான். இதுதான் அவனது கேந்திரமான நம்பிக்கை. இதுவே அவனது மிகச் சிறந்த கவிதைகள் பலவற்றையும் எழுதத் தூண்டியது ; இதுவே இஸ்லாமின் புரட்சி, கட்டறுந்த பிரா மித்தியூஸ், ஹெல்லாஸ் ஆகியவற்றின் ஆத்மாவாகவும் உள்ளது." இவ்வாறு ஷெல்லி அன்பையே அடிப்படைத் தத்துவ மாகக் கொண்டதால், அவன் அரசியல் போராட்டத்தைக் கூட சாத்வீகமான முறையில் நடத்தலாம் என்று கருதினான். இதனை நாம் (முன்னர் பார்த்த) பீட்டர்லூ படுகொலையின் போது அவன் எழுதிய 'அராஜகத்தின் முகமூடி' { Mask of Anarchy) என்ற பாடலிலேயே காணலாம். 'தூங்கிக் கிடந்த சிங்கங்கள் விழித்தெழுந்து வருவது போல் அழிக்க முடியாத பெருந்திரளாய் எழுச்சி பெறுங்கள். நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது உம்மீது விழுந்த விலங்குகளைப் பனித்துளிகளைச் சிதறவடிப்பது போல் பூமியில் சிதறவடியுங்கள்! - நீங்களோ' பலர் அவர்களோ"