பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலர்!' என்று அந்தப் பாடலில் இங்கிலாந்தின் மக்களுக்கு அறைகூவல் விடுக்கின்ற ஷெல்லி, அதே கவிதையில் பின் வருமாறு உபதேசிக்கின்றான்: பின்னர் கொடுங்கோலர்கள் துணிவுள்ளவர்களானால், உங்கள்மீது அவர்கள் ஏறிச் செல்லட்டும். வெட்டட்டும்! குத்தட்டும்! துணிக்கட்டும்! துண்டாக்கட்டும்! தாங்கள் விரும்பியதையெல்லாம், அவர்கள் செய்யட்டும். :

  • 'மடித்துக் கட்டிய கரங்களோடும், நிலைகுலையாத்

கண்களோடும், பயமற்றும், வியப்பற்றும், அவர்களது கோபாவேசமெல்லாம் மாய்ந்து மடியுமட்டும், அவர்கள் வெட்டும் சமயம் அவர்களையே உற்று நோக்குங்கள், ' - 4 * பின்னர் அவர்கள் தாம் எங்கிருந்து வந்தார்களோ அந்த இடத்துக்கே வெட்கத்தோடு திரும்பிச் செல்வார்கள், மேலும் அவ்வாறு அங்கு சிந்திய ரத்தம் அவர்களது கன்னங்களில் வெட்கத்தால் கொதிப்பேறிய செம்மையாகட்/ பேசக் காண்பீர்! (பாடல்கள் 84, 85, 8 6) : ' (And if then the tyrants dare, Let then ride among yo11 there, Slash, and stab, and mairm, and hew- What they like, that let them do.. With foided arms and steady eyes And little feat, and less Stirprise, Look upon them as they stay Ti their rage has died away. . Then they will return with shame To the place frorin which they came And the blood thus shed will speak In hot blushes on their cheek), ஷெல்லியின் இந்தச் சாத்வீகமான போராட்ட முறை யைக் காணும்போது, இந்தியர்களான நமக்கு அரசியல் போராட்டத்தில் அஹிம்சை முறையைக் கடைப்பிடித்த நமது தேசத்தந்தை காந்தியடிகளின் நினைவு வரத் தான் செய்யும். ஆம். ஷெல்லியின் உணர்ச்சி பூர்வமான கவிதை