பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகைவனுக் கருள்வாய்--நன்னெஞ்சே! பகைவனுக் கருள்வாம்! புகை நடுவினில் தீயிருப்பதைப் பூமியில் கண்டோமே-நன்னெஞ்சே! பகை நடுவினில் அன்புரு வான நம் பரமன் வாழ்கின்றான்... லாழ்வை நினைத்த பின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேரா:மோ? நன்னெஞ்சே! தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற சாத்திரம் கேளாயோ?-நன்னெஞ்சே; நின்னவரும் புலி தன்னையும் அன்பொடு சிந்தையில் போற்றிடுவாய்-நன்னெஞ்சே! அன்னை பராசக்தி அவ்வுரு வாயினள் அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே! {பாட்டு 1,4,5). ஷெல்லியைப் போலவே பாரதியும் தீமையைத் தீமை' யாலும், பலாத்காரத்தைப் பலாத்காரத்தாலும் வேரறுக் கக் கூடாது என்றும், அவ்வாறு செய்தால் மீண்டும் புதிய தீமையும், புதிய பலாத்காரமுமே தோன்ற ஏதுவாகும் என்றும் கருதினான். எனவே பாரதியும் சாத்வீகமான வழியே சாலச் சிறந்தது என்றும் நம்பினான். உதாரணமாக, சோஷலிஸ்ட் கொள்கையை வரவேற்ற பாரதி அந்தக் கொள்கையை நடைமுறைக்குக் கொண்டுவர ருஷ்ய நாடு கடைப்பிடித்த பலாத்கார வழியை ஆதரிக்கவில்லை. இதனைக் குறித்து அவன் 'செல்வம் {2}' (கட்டுரைகள் சமூகம்) என்ற கட்டுரை யில் பின்வருமாறு எழுதுகிறான்:

    • ஆனால் இந்த (சோஷலிஸ்ட்) முறைமை போர் கொலை

பலாத்காரங்களின் மூலமாக உலகத்தில் பரவி வருவது எனக் குச் சம்மதமில்லை. எந்தக் காரணத்தைக் குறித்தும் மனிதருக், குள்ளே சண்டைகளும் கொலைகளும் நடக்கக் கூடாதென்பது என்னுடைய கருத்து. அப்படியிருக்க, சமத்வம், சகோதரத் . வம் என்ற தெய்வீக தர்மங்களைக் கொண்டோர் அவற்றைக் 1 65