பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குத்து வெட்டு பீரங்கி துப்பாக்கிகளினால் பரவச் செய்யும் படி முயற்சி செய்தல் மிகவும் பொருந்தாத செய்கையென்று நான் நினைக்கிறேன்.... எல்லா மனிதரும் உடன் பிறந்த சகோ தரைப்போல் ஆவார்கள் என்றும், ஆதலால் எல்லாரை யும் சமமாகவும் அன்புடனும் நடத்த வேண்டும் என்றும் கருதுகிற தர்மிஷ்டர்கள் தம்முடைய கருணா தர்மத்தை நிலைநிறுத்த, கொலை முதலிய மகா பாதகங்கள் செய்வது நமக்குச் சிறிதேனும் அர்த்தமாகக்கூடாத விஷயம். கொலை யாலும் கொள்ளையாலும் அன்பையும் சமத்துவத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்வோர் தம்மைத்தாம் உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன். 'இதற்கு நாம் என்ன செய்வோம்? கொலையாளிகளை அழிக்கக் கொலையைத்தானே கைக்கொள்ளும்படி நேருகிறது; அநியா யம் செய்வோரை அநியாயத்தாவேதான் அடக்கும்படி நேரிடுகிறது' என்று ஸ்ரீமான் லெனின் சொல்லுகிறார். இது முற்றிலும் தவறான கொள்கை. கொலை கொலையை வளர்க் குமே ஒழிய அதனை நீக்கவல்லதாகாது. அநியாயம் அநியா யத்தை விருத்தி பண்ணுமே ஒழியக் குறைக்காது .. - பாபத் ' தைப் புண்ணியத்தாலேதான் வெல்ல வேண்டும். பாபத் - தைப் பாபத்தால் வெல்லுவோம் என்பது அறியாதவர் கொள்கை. அதர்மத்தைத் தர்மத்தால் வெல்ல வேண்டும். தீமையை நன்மையாலேதான் வெல்ல முடியும், கொலையை யும் கொள்ளையையும் அன்பினாலும் ஈகையாலும்தான் மாற்ற முடியும், இதுதான் கடைசி வரை கைகூடி வரக்கூடிய மருந்து. மற்றது போலி மருந்து..... இவ்வாறு சோஷியலிஸத்தை அடைவதற்குப் பலாத்கார முறையைக் கடைப்பிடித்தல் கூடாது என்று கூறுகின்ற பாரதி, அந்த லட்சியத்தை அடைவதில் அபிப்பிராய வித்தி யாசம் கொள்ளவில்லை. அதனைச் சமாதான நெறிமுறை களால் அடைய வேண்டும் என்பதே அவனது கருத்து. இதனைக் குறித்தும் அவன் அதே கட்டுரையில் பின்வருமாறு எழுதுகிறான்:

  • 'கோடிக்கணக்கான ஜனங்கள் வயிறு நிறைய உணவு

187:-