பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடைக்குமென்ற நிச்சயமில்லாமலும், லட்சக்கணக்கான ஜனங்கள் ஒரு வேளைக் கஞ்சி கிடைக்காமலே சுத்தப்பட்டினி 4யால் கோ: ர மரணம் எய்தும்படியாகவும் நேர்ந்திருக்கும் தற்கால நிலைமையை நாம் ஒரு க்ஷணம்கூடச் சகித்திருப்பது நியாயமில்லை என்பது சொல்லாமலே போதரும். எனவே, உலகத் துன்பங்கள் அனைத்திலும் கொட்டியதா என இந்த ஏழை மைத் துன்பத்தைச் சமாதான நெறியாலும் மாற்றக்கூடிய உபாயமொன்றை நாம் கண்டுபிடித்து நடத்துவோமானால், அதினின்றும் நமது நாடு பயனுறுவது மட்டுமேயன்றி, உலகத் தாரெல்லோரும் நம்முடைய வழியை அனுஷ்டித்து நன்மை அடைவார்கள். இங்ஙனம் அரசியல் சமுதாயப் போராட்டங்களில் பலாத்காரத்தை உபயோகிப்பதைக் கண்டிக்கின்ற காரணத் தா லும், ஷெல்லியின் கவிதைகளில் இளமையிலேயே ஈடு பாடு கொண்டிருந்த காரணத்தாலும், காந்தியடிகளின் சாத் வீகமான போர்முறையை, பாரதி எடுத்த எடுப்பிலேயே அங்கீகரிக்கிறான். அதாவது, காந்தியடிகள் இந்தியாவுக்கு வந்து இந்திய அரசியல் போராட்டத்துக்குத் தலைமை தாங்கு - வதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்பே, 1909-ம் ஆண்டில் அவர் தென்னாப்பிரிக்காவில் நடத்தி வந்த சத்தியாக்கிரகப் போரைப் பற்றி அறிய வந்த பாரதி, அன்றே அதனை வர வேற்றதோடு மட்டுமல்லாமல், இந்திய நாட்டுக்குக் காந்தி யின் சாத்வீக மார்க்கமே சிறந்தது என்பதையும் அங்கீ கரித்து, ஒரு கட்டுரை எழுதிவிட்டான். (பாரதி புதையல்-2). கrனவே தான் அவன் தன து, 29காத்மா காந்தி பஞ்சக' த்தில் காந்தியடிகளின் அறப்போர் நெறியைக் குறித்துப் பின் வருமாறு எழுதினான் ! தன்னுயிர் போலே தனக்கழி வண்ணும் பிறனுயிர் தன்னையும் கணித்தல்; மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம் கடவுளின் மக்களென் றுணர்தல்; இன்ன , மய்ஞ்ஞானத் துணிவினை மற்றாங்கு இழிபடு போர், கொலை, தண்டம் 188