பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னியே கிடக்கும் அரசியல் அதனில் பிணைத்திடத் துணிந்தனை, பெருமான்! பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தார்; அதனிலும் திறன் பெரிதுடைத்தாம் அருங்கலை) வாணர் மெய்த் தொண்டர் தங்கள் அறவழி என்று நீ அறிந்தாய். ... ... (பாடல்கள் 4, 5) மேலும், “கட்டவந்த பிராமித்தியூஸில் ஷெல்லி தூள் பங் களைச் சகித்துக் கொண்டும், அதிகார மமதையை எதிர்த்துச் கொண்டும், அன்பு செலுத்திக் கொண்டும், என்றோ வரப் போகும் சுபீட்ச வாழ்வுக்காகத் தன்னையே தியாகம் செய்தும் வாழ்வதுதான் வாழ்க்கை என்று கூறியதைப் பார்த்தோம், சாரதியும் அத்தகைய தியாக வாழ்க்கையைப் போற்றுகிறாள். மேலும் தருமத்துக்காக உயிர் கொடுப்பதே வாழ்க்கையென் றும், அவ்வாறு உயிர் கொடுப்பவரே பெரியோர் என்றும், உண்மையறிந்தவர் என்றும், முத்திநிலை எய்திய பக்குவச் சான்றோர் என்றும் அவன் கூறுகிறான். இதனை அவனது 'குரு கோலிந்தர்' என்னும் பாடலில் காண்கிறோம், அவனது கூற்று வருமாறு: அறத்தினைத் தமதோர் அதிவினாற் கொண்ட - மட்டிலே RDாணி. * மாண்பெற லாகார். அறிற்து தழைப்ப நெஞ்சுகம் காட்டி வாட்குத் தேற்று மாய்பவர் பெரியோர்; அவரே மெய்ம்மையோர்; முத்தரும் அவரே! (வரிகள் 78-82i. மனிதனின் சிறுமையும் பெருமையும் மனித குலத்தின் சுதந்திரம் முதலிய முப்பெருங் கோட் பாடுகளைப் போற்றிய இவ்விரு கவிஞர்களும் மானிடத்தையும் அதன் வலிமையையும் ஆற்றலையும் போற்றிப் புகழ்ந்தவர்கள்; அதே சமயம் மனிதனிடம் நிலவும் சிறுமைகளையும் காணத் தவறாதவர்கள், அவற்றைக் கண்டு நெஞ்சம் புழுங்கியவர்கள்; பா. ஷெ-12 189