பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

As I am now; but those who feel it most Are happier stil, after long sufferings As I shalt soon become). எனவே காதலைப் பெறுவது ஒரு பாக்கியம்; அதனை உணர்வதோ ஆனந்தம்; அதனால் துயரங்கள் மறைந்து மகிழ்ச்சி பிறப்பதோடு மட்டுமல்ல, அந்தக் காதல் எந்த ஒரு ஜீவனையுமே உன்னத நிலைக்கு உயர்த்தி, அதனைக் கடவுள் நிலை பெறச் செய்துவிடுகிறது. இதே கருத்தை ஷெல்லி வேறொரு கவிதையிலும் கூறுகிறான். அதே சமயம் காதல் என்பது எல்லாவற்றையும் சமதையாக ஆக்கிப் பேதா பேதத்தை நீக்கி விடுகிறது என்றும் கருதுகிறான். அவனது .

  • எபிசைக்கிடியான்' என்ற கவிதையில் நாம் பின்வரும் கருத்

தைக் காண்கிறோம்: "காதல் எல்லாப் பொருள்களையும் சமாக்கி விடுகின்றது என்பதை நான் அறிவேன். இந்த ஆனந்தமான உண்மையை, எனது சொந்த இதயமே உறுதிப் படுத்திக் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். அதாவது, ' காதலிலும் பிரார்த்தனையிலும் ஈடுபட்டு, மண்ணுக்கடியில் புதைந்திருக்கும் புழுவின் உணர்ச்சியும் கூட, கடவுளோடு ) தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறது” (வரிகள் 125- ! 129}: (...............I know That Love makes all things equal; I have heard By rmice own heart this joyous truth averred; The spirit of the Worm beneath the sod in love and worship, blends itself with God). இவ்வாறு சமத்துவத்தையும், புனிதத்துவத்தையும், அமரத்துவத்தையும், ஆனந்தத்தையும், கடவுள் நிலையையும் வழங்கக்கூடிய 'சக்தியான காதலோ மரணத்தைக் காட்' டிலும் வலிமையானது என்றும், அது எல்லாவிதமான துன் . பங்களிலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலை வழங்கும் மகத்தான சக்தி பெற்றது என்றும் ஷெல்லி. அதே : கவிதையில் கூறுகிறான். அந்த வரிகள் பின்வருமாறு: “ஆனால், உண்மைான காதல் என்பது இதுவரையில் அப்படியொன் 184