பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊட்டியது. இந்த யுத்தம் இந்திய மக்களுக்கு எவ்வித நம்பிக்கையையும் தேசிய ஆர்வத்தையும் உண்டாக்கியது என்பதுபற்றி பூஜ்யர் சி. எப். ஆண்ட்ரூஸ் தமது : இந்திய மறுமலர்ச்சி (Indiar; Renaissarrce-C, F. Andrews) என்ற நூலில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் பின் 1905-ம் ஆண்டில் ருஷ்ய நாட்டில் ஜார் அரசாங்கத்துக்கெதிராக, அந்நாட்டு மக்கள் புரட்சி செய்தார்கள். இந்த முதல் ருஷ்யப் புரட்சி அடக்கியொடுக்கப்பட்ட போதிலும்கூட, அது குறிப்பாக, ஆசிய ஆப்பிரிக்க மக்களுக்கு ஏகாதிபத்தி யத்தை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய தெம்பைக் கொடுத்தது. இவ்விரு நிகழ்ச்சிகளும் கீழைநாடுகளை விழித் தெழச் செய்தன என்பது சரித்திர உண்மை . இந்தப் புரட்சி யைத் தொடர்ந்து பாரசீ 4ம் , துருக்கி சீனா முதலிய நாடு களில் அடுத்தடுத்துப் புரட்சிகள் எழுந்தன. இவற்றின் தன்மைகள் எவ்வாறிருந்த போதிலும் இத்தகைய நாடுகள், விழித்தெழுந்துவிட்டன என்ற உண்மை புலனாயிற்று, 'இந்தச் சந்தர்ப்பத்தில் தான் இந்தியாவிலும் கர்ஸான் பிரபு உண்டாக்கிய வங்காளப் பிரிவினையை எதிர்த்து, 1905-ம் ஆண்டில் இந்திய தேசிய இயக்கம் புதிய விழிப்பைப் பெற்ற றது. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை' என்ற திலகரின் கோஷத்துடன் தீவிரவாதத் தே சியம் பிறப்பெடுத்தது. - பாரதி இந்த இயக்கத்தின் கவிராஜனாகத் திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல், அரசியல் சுதந்திரத்துக்கும் மேற்பட்ட சமு தாய, பொருளாதாரச் சுதந்திரங்களுக்கான புரட்சிக் கருத் துக்களையும் பாடி வந்தான் என்பதை நாமறிவோம்... ஷெல்லி... பரம்பரையான பிரபுக் குடும்பத்தில், பிரபு வீட்டுப் பிள்ளையாகப் பிறந்தான்; அவனது தந்தையான திமோதி ஷெல்லி ஒரு பெரிய நிலப்பிரபு; அத்துடன் பாரா ளுமன்ற அங்கத்தினருங் கூட, சொல்லப் போனால், ஷெல்லி இரண்டு லட்சம் பவுனுக்கு மேற்பட்ட சொத்துக்கு வாரி - - சாகப் பிறந்தான்; வரிவிலக்கு இருந்த அந்தக் காலத்தில் இந்தச் சொத்து குபேர சம்பத்து என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் ஷெல்லியின் புரட்சிப் போக்கு இந்தச்