பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வத்தை மட்டுமல்லாமல், அந்தச் சீமான் குடும்பத்தை யும் விட்டு, அவனது ஆயுட்காலம் முழுவதும் அவனை விலகியிருக்கச் செய்துவிட்டது. செல்வக் குடும்பத்தில் பிறந்தவனாயிருந்த போதிலும், ஷெல்லியிடம் பிறவியிலேயே மனிதாபிமானமும், கருணையுள்ளமும் அமைந்திருந்தன, மேலும் அவன் தனது எட்டாவது வயதிலேயே கவிதைகள் புனையவும் தொடங்கி விட்டான் எனத் தெரிகிறது. பத்து வயதுக் காலத்திலேயே அவனிடம் தென்பட்ட மனிதாபி 4மானத்தையும் புரட்சிப் போக்கையும் சுட்டிக் காட்டும் ஒரு நிகழ்ச்சியை எட்மண்ட் பிளண்டன் என்ற வரலாற்றாசிரியர் குறிப்பிடுகின்றார்: “'அதனளவில் அத்தனை முக்கியத்துவமில் லாத, எனினும் ஒரு தாராளமான துணிச்சலைக் காட்டும் ஷெல்லியின் ஒரு செய்கை, அதாவது ஒரு நாட்டிய நிகழ்ச்சி யின்போது, ஷெல்வி கடைப்பிடித்த சம்பிரதாய விரோத மான ஒரு நடத்தை, ஹோர்ஷாம் வட்டாரத்தில் சல சலப்பை உண்டாக்கியது. கூடியிருக்கின்ற பெண் மக்களில் அந்த ஸ்திலும் நாகரிகத்திலும் உயர்ந்தவர்களைத் தேர்ந் தெடுத்து, அவர்களோடு பீல்ட் பிளேஸைச் சேர்ந்த இளங் கனவான் கள் நடனமாடும் நிகழ்ச்சி அது. அந்தப் பெண் களைத் தவிர, அங்கு மற்றவர்களின் கவனத்திலிருந்து தப்பா விட்டாலும், ஒரு யுவதி தனிமையாக ஒதுங்கியமர்ந்திருந் தாள். அவள் கற்பழிக்கப்பட்டவள். இந்த விஷயம் எல் லோருக்கும் தெரியும். ஷெல்லிக்கோ இவ்வளலே போது மானது . எவரது அனுதாபத்தையும் பெறாத, துரதிருஷ்ட சாலியான அந்த யுவதியை நோக்கி, ஷெல்லி சென்றான்; ' தனது இனிமை மிகுந்த பாணியில் அவளிடம் கைகொடுத்து அவளை அழைத்தான்' ' { Shelley.Edmund Blunden). பாரதி வறுமைப்பட்ட குடும்பத்தில் பிறக்காவிட்டாலும், சாதாரண மத்தியதர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தான். தந்தை இறந்த பின்னர்தான் அவனைப் பாழ்மிடி சூழ்ந் தது . ஷெல்லியைப் போலவே பாரதியும் பால்யத்திலேயே கவிபாடத் தொடங்கி, பதினோராவது வயதிலேயே 'பாரதி' என்ற பட்டத்தையும் பெற்றுவிட்டான். அவனது பால்யப்