பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பருவத்திய நிகழ்ச்சிகளைப் பற்றி, பாரதி வரலாறுகளில் டேலாதிய குறிப்புக்கள் இல்லை. எனினும் * ஐயர் வீட்டுப் பிள்ளை' யான பாரதி அந்தக் காலத்தின் வைதிக சம்பிரதாயங் களை மீறி, தன் குடும்பத்தாருக்குத் தெரியாமல், " சூத்திரப் . பிள்ளைகளோடு பழகவும், 'சூத்திரக் கடைகளிலே தின் பண்டம் வாங்கித் தின்ன வும் செய்தான் என்று எட்டயபுரத் திலிருந்த சில முதியவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கி றேன், பள்ளிப் படிப்பு பிரபுவீட்டுப் பிள்ளையான ஷெல்லி பால்யத்தில் ஸியான் ஹவுஸ் அகாடமி என்ற பள்ளியிலும், பின்னர் பதின் மூன்றா வது வயதில், 18 05-ம் ஆண்டில் ஈட்டனிலுள்ள உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றான். பிரெஞ்சுப் புரட்சியின் விளை வாகத் தோன்றிய புதிய சிந்தனைகள் மாணவர்கள் மனத் தைக் கெடுத்துவிடாதவாறு, அன்றைய கல்வி நிலையங் கள் மிகுந்த கண்டிப்பையும் அடக்குமுறையையும் கையாண்டு வந்தன. ஷெல்லியின் வரலாற்றாசிரியர் ஆந்த்ரே மொராய் பின்வருமாறு கூறுகின்றார்; சமீபத்திய பிரெஞ்சுப் புரட்சி யான து. ஆளும் வர்க்கங்களைப் பாதிக்கும் தாராளவாதப் போக்கின் அபாயங்களை நிரூபித்துவிட்டது ...எனவே இங்கிலாந்து இதமாகப் பேசும் பசப்புக்காரர்களின் பரம்பரையொன்று தான் பொதுக் கல்வி நிலையங்களிலிருந்து வெளிப்பட வேண்டுமென விரும்பியது. ஈட்டனில் கல்வி கற்று வந்த இளம் பிரபுக்களிடம் எந்தவொரு குடியரசுக் கொள்கை வேட்கையும் குடிகொள்ளச் சாத்தியமில்லாத வாறு அடக்கியொடுக்குவதற்காக, அவர்களது கல்வி முறை சம்பிரதாயமான, சாரமற்ற போக்கிலேயே வகுக்கப்பட்டிருந் தது* * (Ariet-Andre Maurois}. ஆனால் ஷெல்லியோ தான் படித்த காலத்தில் இந்தக் கட்டுப்பாட்டையும் கல்வி முறை யையும் தர்மாவேசத்தோடு எதிர்த்தே வந்தான், பள்ளிகளில் நடந்து வந்த கொடுங்கோன்மையைக் கண்டு அவன் கண் ணீர் வடித்தான். அந்தக் காலத்திய அவனது உணர்ச்சிகளை 19