பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யும், செய்கைகளையும் குறித்து அவன் தான் எழுதியுள்ள “ இஸ்லாமின் புரட்சி' {Revolt of Astara) என்ற புரட்சிக் காவியத்தின் சமர்ப்பணத்தில் பின்வருமாறு கூறுகிறான்: பின்னர் நான் என் கைகளைப் பற்றிக்கொண்டு, சுற்று முற்றும் பார்த்தேன். ஆனால் கண்ணீர் வழிந்தோடும் என் கண்களைக் கண்டு கேலி செய்யப் பக்கத்தில் யாருமில்லை . அந்தக் கண்களிலிருந்து சூடான துளிகள் வெயில் படிந்த தரையில் விழுந்தன. எனவே, நான் எனக்குள் வெட்க மற்றுப் பேசிக்கொண்டேன்: 'அவமானம் அல்லது அடக்கம் எதுவுமின்றி, சுயநலமிகளும் பலவான்களும் இன்னும் கொடுமை இழைப்பதைக் கண்டு, எனக்கு அலுத்துப் போகி றது. எனவே என்னுள் அத்தகையதொரு சக்தி இருக்குமே யானால், நான் ஞானத்தோடும், நியாயத்தோடும், சுதந்தி ரத்தோடும், காருண்யத்தோடும் நடப்பேன்': இதன்பின் நான் என் கண்ணீரை அடக்கினேன்; என் இதயம் அமைதி கண்டது: சாந்தமாகவும் தைரியமாகவும் இருந்தேன் . " << அந்த நேரம் முதல், நான் விலக்கப்பட்டிருந்த அறிவுச் 'சுரங்கங்களிலிருந்து ஊக்கமிகுந்த எண்ணத்தோடு அறிவைச் சேகரித்தேன்; எனினும், எனது கொடுங்கோலர்கள் தெரிந் திருந்த, அல்லது கற்றுக்கொடுத்த எதையும் நான் கற்க விரும்பவில்லை; ஆனால் எனது ஆத்மா மனித குலத்துக்கு மத்தியில் போராடி நடப்பதற்கு முன்னால், அதற் குதவும் பூட்டுக் கவசத்தை அந்த ரகசிய கிடங்கிலிருந்து நான் பெற்றுக் கொண்டேன் ....” ('சமர்ப்பணம், ' பாட்டு 4: 5). {And then I clasped my hands and looked around But none was near to mock my streaming eyes, Which poured their warm drops on the sunny ground- So without shame, I spake:---'I will be wise, And just, and free, and mild, if in me lies . :Such power, for I grow weary to behold,