பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவங்களாக மாற்றிக் காட்ட முனைகிறான் . பொதுவாக, பார திட்டம் பூதாதீதமான அழகு லட்சிய வடிவங்களைக் காண்பது அரிதென்றே சொல்லலாம். 'அழகுத் தெய்வம்' என்ற தலைப்பிலேயே உbாரதி ஒரு பாடல் பாடுகிறான், அந்தத் தெய்வம் எப்படிப் பட்டவள்? மங்கியதோர் நிலவினிலே கனவிலிது! கண்டேன்; வயது பதி னாறிருக்கும்; இளவயது மங்கை ; பொங்கி வரும் பெருநிலவு போண்ற ஒளி முகமும், புன்னகையின் புதுநிலவும் போற்ற வருந் தோற்றம்; துங்கமணி மில்போலும் வடிவத்தாள் வந்து தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள். அங்கதனில் கண்விழித்தேன்; அட்டாலோ அல்-டா! அழகென்னும் தெய்வம்தான் அது வென்றே அறிந்தேன். (பாரட்டு 1) இந்த அழகுத் தெய்வத்தை, மங்கிய நிலவின் பசந் திருண்... ஒளி மூட்டத்தில், தூக்கம் கலையாத கனவு நிலையில் கண்டதாக, அதாவது ஒரு தெளிவற்ற பகைப்புலனில் கண்ட தாகப் பாடுகின்ற அதே சமயம், எடுத்த எடுப்பிலேயே “வயது பதினாறிருக்கும்; இளவயது மங்கை' என்று திட்டவட்டமான வடிவை, அதாவது மானிட உலகத்தின் அளவு கோலின் மூலம் இனம் காணக்கூடிய ஓர் எழிலை, அவன் இனங்காட்டி விடுகிறான். ஆம், அழகுத் தெய்வமே அவனுக்குப் பதினாறு வயது மங்கையாகத்தான் காட்சி தருகிறாள். இதனைப் போலவே அவன் தனது லட்சியப் பெண்மை வடிவங்களையும் மண்ணுலகத்தின் தோற்றம் மாறாமலே, தெய்வீக எழில் வடிவங்களாகக் காண்கிறான். இதனை நாம் அவனது பல பாக்களின் மூலம் உணரலாம். 'பாஞ்சாலி சபத'த்தில் அவன் பாஞ்சாலியைப் பற்றிப் பாடும்போது, ' -புகழ்ப் பாஞ்சால நாட்டினர், தலிப்பயனை, ஆவியில் இனிய வளை-உயிர்த்து . . . 198