பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறுதிப் பொருளாகவும் கொண்டவன். எனவே அவன் காணும் கண்ணம்மா தெய்வாம்சம் பெற்ற பெண்ணாக , தெய்வீக எழிலரசியாக இருந்தாலும், அவள் மண்ணுவகத் தின் பெண்ணாக வடிவம் கொண்டு, மண்ணுலக மாந்தரின் இயல்புகளோடுதான் பாரதிக்குத் தென்படுகிறாள், மண் ணுலகப் பிடிப்பை அறுத்துக் கொண்டு, சூட்சுமமான பர வெளிக்குத் தாவிப் பநக்க எண்ணாத பாரதியின் லட்சியப் பெண் மை வடிவங்கள், மனிதாம்சத்துடனேயே பெரிதும் காட்சி தருகின்றன, ஆம், மனிதரில் தெய்வத்தைக் காணும் புலவன் அவன். இந்தப் பண்புதான் அவனது கவிதைகள் பலவும் நமக்குப் புலப்படுத்தும் உண்மையாகும், எல்லையில்லாத அழகு, கரை காணாத காதல் ஆகிய லட்சியங்களின்மீது தாகம் கொண்டு, அந்த லட்சியத்தைக் காண, அடையத் தவிக்கும் கவியுள்ளத்தின் வேட்கையைப் பெய்து புலப்படுத்தும் கொள்கலமாகவே ஷெல்லியின் பெண் பாத்திரங்கள் பலவும் தென்படுகின்றன. என் று முன்னர் பார்த்தோம். ஷெல்லி 1815-ம் ஆண்டில் எழுதிய " அலாஸ்டர்' என்ற கவிதையில் தொடங்கி, 'எபீசைக்கிடியா? னின் பிறப்பு வரையிலும் இந்த வேட்கை அவனது பாடல் களில் பிரதிபலித்தது. 'எபிசைக்கிடியா'னில் அவன் எமிலி யாவின் வடிவத்தில் அந்த வேட்கையின் லட்சிய சித்தியையே கண்டான்; எனினும் அதன் பின்னர் அவன் எழுதிய 'ஜக்கா' என்ற கவிதையோ, அந்த வேட்கையே ஓர் எல்லை காணாத லட்சியமாக மீண்டும் தென்படுவதைத்தான் புலப்படுத்தியது. இத்தகையதொரு வேட்கையான லட்சியம் பாரதியிடமும் குடி கொண்டிருந்தது. பாரதியின் 'குயில் பாட்டு' இந்த வேட்கையின் சிறந்ததொரு பிரதிபலிப்பென்றே சொல்ல வேண்டும், 'காதலோ காதல் இனிக் காதல் கிடைத்திலதேல் சாதலோ சாதல்' எனச் சாற்றுமாரு பல்லவி என் உள்ளமாம் வீணைதனில் உள்ள வீடத்தனையும் விள்ள ஒலிப்பதால் வேறோர் ஒலியில்லை "(பகுதி 3, வரிகள் 55-58)