பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ற பல்லவிதான் அந்த அற்புதமான கவிதைக்கே ஆதார சுருதியாக நின்று ஒலிக்கின்றது. குயில் பாட்டு முழுவதிலுமே இந்தத் தாகத்தின் தவிப்பும் சஞ்சலமும்தான் ஒலிக்கின்றன, குயில் பாட்டைத் தவிர, பாரதியின் கண்ணம்மாவின் காதல், கண்ணம்மாவின் நினைப்பு, மனப்பீடம், கண்ணம்மாவின் எழில், சந்திரமதி, வள்ளிப் பாட்டுக்கள் முதலிய பாடல்கள் அனைத்துமே இந்த லட்சியக் காதல்- அழகு வேட்கையின் பிரதிபலிப்புக்கள் என்றே சொல்லலாம், ஷெல்லியின்

  • எபிசைக்கிடியா'னில் எமிலியா என்ற மானிடப் பெண்ணே "

அவனுக்கு அந்த லட்சியத்தின் வடிவாகத் தோற்றினாள் என் en ' பார்த்தோம். ஆனால் . பாரதியின் மேற்குறித்த . பாடல்கள் எந்தவொரு தனி மானிடப் பெண்ணையும் குறிப். பிட்டுச் சொல்லவில்லை; பாரதியின் இத்தகைய லட்சிய வேட்கையைப் பொழியும் கவிதாமிர்தத்தைத் தாங்கி நிற்கும் கொள்கலமாக, எந்தவொரு மானிடப் பெண்ணும் பாரதி 'யின் மனத்திரையில் இடம் பெற்றிருந்தாளா, இல்லையா என்பது நமக்குத் தெரியவரவில்லை. எனினும், இந்தப் , LIT...ல்கள் பாரதியின் செளந்தர்யக் காதல் வேட்கையைப் புலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மண்ணுலகக்' காதலின் தாகத்தையும் சேர்த்தே பிரதிபலிக்கின்றன என்ற உண் மையை நாம் மறுப்பதற்கில்லை. மேலும், பாரதியும் ஷெல்லியைப் போலவே அழகையும் காதலையும் பற்றிய லட்சிய வேட்கை கொண்டிருந்த காரணத் தால், அவன் காணும் கிருதயுகமும் அழகான பெண்ணரசி களின்றி நிறைவு பெறவில்லை என்றே சொல்லலாம். கிருத யூகத்துப் பெண்களைப்பற்றி, பாரதி நேர்முகமாக எங்கும் குறிப்பிடவில்லையாயினும், தனது 'பாஞ்சாலி சபத' த்தில் கலியுகத்துக்கு முந்திய தர்ம ராஜ்யத்தைப் பற்றிக் கூறும் போது, .....காவினத்து நறுமலரின் கமழைத் தென்றல் பொன்னங்க மணிமடவார் மாடமீது புலவி செயும் போழ்தினிலே போந்து வீச வன்னங் கொள் வரைத்தோளார் மகிழ, மாதர்