பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைக்கு ஒரு வயது தான் ஆகியிருந்தது. அந்தச் சமயத் தில் ஷெல்லி அந்தக் குழந்தையைக் நோக்கிப் பாடுவதாக ஒரு பாடலும் பாடினான், அதில் அவன் இவ்வாறு பாடினான்: 4 : அவர்கள் உன் அருமைச் சகோதரனை யும் சகோதரியையும் பறித்துக்கொண்டார்கள். அவர்களை , உனக்கு அருகதை யற்றவர்களாகப் பண்ணிவிட்டார்கள். அவர்கள் எனக்குப் புனித மாக இருந்திருக்கவேண்டிய அந்தப் புன்னகையை வாடச் செய்து, கண்ணீரையும் வற்றச் செய்து விட்டார்கள்... அவர்கள் என் பெயரையும் உன்னையும் சபிப்பார்கள். ஏனெனில் நாம் அச்ச மற்றும், சுதந்திரமாக இருக்கிறோம் {T-William Shelley-பாட்டு 2): - (They have taken thy brother and sister dear They have made them unit for thee; They have withered the smile and dried the tear | which should have been sacred to me, ... And they will curse my name and thee . - Because we fearless are and free). . இவ்வாறு அவன் பாடியதோடு நில்லாமல் ,* கொடுங் கோலர்கள் என்றென்றும் ஆள்வார்கள் என்றோ, அல்லது தீய நம்பிக்கை கொண்ட மதகுருக்கள் அப்படி ஆள்வார்கள் என்றோ, எண்ணி அஞ்சாதே! (பாட்டு 4) ' ' (Fear not the tyrants will rule for ever or the priests of the evil faith.) என்றெல்லாம் பாடி, தனது தர்மாவேசத்தை யெல்லாம் அந்தக் குழந்தை ை3. முன்னிலைப்படுத்தி வெளியிட்டான். அந்தக் குழந்தையேனும் ஒரு தேசபக்தனின் உரிமையைக் கோரவேண்டும் என்று கூறி அந்தப் பாடலை அவன் முடித் துள்ளான், பாதகம் செய்யவுரைக் கண்டால்-நாம் பயம் கொள்ள லாகாது பாப்பா! மோதி மிதித்து விடு பாப்பா! - அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! 202 -