பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று பாரதி தனது ‘பாப்பாப்பாட்'டில், (பாட்டு, 8) தனது மூன்று வ8:துக் குழந்தையான பாப்பாவை(சகுந்தலா பாரதி) முன்னிலைப்படுத்திப் பாடியுள்ளானல்லவா? அதேபோலத் தான் ஷெல்லியும் தனது ஒருவயதுக் குழந்தையை முன்னி லைப்படுத்தி, அதற்குச் சுதந்திர தாகத்தையும், தைரியத்தை யும் கற்றுக்கொடுக்கிறான், 'பாப்பாப் பாட்டுக்கான எண் ணத்தை, ஷெல்லி தன் மகனுக்கெழுதிய இந்தக் கவிதையே, A.Gாரதியின் மனத்தில் தோற்றுவித்திருக்கக்கூடும் என்று நாம் எண்ணவும் இடமுண்டு. ஆனால் இந்தப் பாலசனையும் ஷெல்லி இழக்க நேர்ந்தது. 1819-ம் ஆண்டில் தனது மூன்றாவது வயதில் அந்தப் பாலகன் நோய்வாய்ப்பட்டுச் சில நாட்களில் இறந்து போய்விட்டான், இந்தப் பையனின்மீது ஷெல்லிக்கு மிகுந்த பாசம். அவன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது ஷெல்லி அந்தப் பையனின் அருகிலேயே, ஓய்வுகூடப் பெறாமல் அறுபதுமணி நேரம் கண் விழித்துக் காத்திருந்ததால், ஸைமண்ட்ஸ்) என்ற ஷெல்லியின் ' வரலாற்றாசிரியர் குறிப்பிடுகின்றார், (Shelley-John Addington Symonds). இவ்வாறு முதல் மனைவிக்குப் பிறந்த குழந்தை களை உயிரோடு பறிகொடுத்தும், இரண்டாம் மனைவிக்குப் பிறந்திருந்த ஒரே குழந்தையை மண்ணில் புதைத்துவிட்டும் புத்திரபாக்கியம் இழந்து, ஷெல்லி சோகத்தில் ஆழ்ந்திருந்த காலம் 1819-ம் ஆண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட இழப் பால் நேர்ந்த புத்திரசோகம் ஒருபுறம்; சமுதாய வாழ்க்கை பில் அங்கீகரிக்கப்படாமல், புறக்கணிப்பட்ட துயரம் ஒரு புறம்; மேலும், வளர்ந்து வந்த ஆங்கிலேயே முதலாளித்துவம் தனது உண்மை சொரூபத்தைக் காட்டி, மனிதர்களைத் தனது கொள்ளைக்கும் சுரண்டலுக்கும் இரையாக்குவதில் ஈடுபட்டு லிட்ட நிலையைக் கண்ட துன்பம் ஒருபுறம்; அதன் முற்போக் கான கோஷங்களெல்லாம் பசப்பு வார்த்தைகளாகவும் பம்மாத்தாகவும் மண்மூடிப் போ னதைக் கண்ட தால் ஏற்பட்ட விரக்தி ஒருபுறம். இத்தகைய சூழ் நிலையில், மனத் திலே சோகமும், விரக்தியும், கவிதை ஊற்றின் வறட்சியும் குடிகொண்டிருந்த காலத்தில், சிறகொடிந்த பறவையைப்