பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"The impulse of thy strength, tuly Yess free Than thou, 0 uncontrollabie! if 'even I were as in Inny boyhood, and could be The comrade of thy wanderings over !Heavez, As then, whea to outstrip thy skiey speed Scarce seemed a vision; I would ne'es have striven As thus with thee in prayer in my sore need Oh, tift me as a wave, a leaf, a cloud! 1 fall upon the thotms of life!1 bleed! A heavy weight of hours khas chained a111 bowed One too like thee; tameless and swift and proud). மேற் கண்ட வரிகள் ஷெல்லியின் மனோ நிலையைப் நன்கு புலப்படுத்துவன, அவனும் இளமையில் யாருக்கும் அடங் காத மூர்க்காவேசமும், சூறாவளி வேகமும், பெருமிதமும் கொண்டிருந்தவன்தான். ஆனால் காலப் போக்கோ அவனைக் கட்டுத் தளையிட்டு முடமாக்கி விட்டது . வாழ்க்கைப் பாதை யில் முட்படுக்கையில் விழுந்து, இதயத்திலிருந்து ரத்தச் சோரி கொட்டும் துன்பத்துக்கும் விரக்திக்கும் ஆளாகி அவன் . பறக்கும் வலிமையற்ற சிறகொடிந்த பறவை போலாகி விட்டான். இருந்தாலும் வானில் ஏறிப் பறக்கவும், அலை கடல் போல் புடை புடைக்கவும், மேகம் போல் - கவிதை மழை பொழியவும் அவனுக்குள்ள தாகம் அடங்கவில்லை. அன்றோ அவன் விண்ணில் பறக்கத் தன்னிச்சையான சக்தி கொண்டவனாக இருந்தான். இன்றோ அவனைத் தூக்கிச் செல்ல ஓர் உந்து சக்தியே தேவைப்படுகிறது. எனவே அவன் அந்த மேல் காற்றைக் கையெடுத்துக் கும்பிடுகின்றான், மேல் காற்றை நோக்கி பின் வருமாறு வேண்டிக் கொள்கிறான்; . “மேல் காற்றே! இந்தக் காட்டைப் போலவே என்னை யும் 'உனது வீணையாக்கிக் கொண்டு வீடு! என் வாழ்க்கை இலைகளும், அந்தக் காட்டின் இலைகளைப் போல் வாடி வதங்கி உதிர்வ னதாம், அதனால் என்ன? 'உனது மகத்தான பேரிசை யின் ஆரவாரம், வருத்தம் தோய்ந்திருந்த போதிலும் இனிமையானதோர் ஆழ்ந்த, இலையுதிர்காலத்தின் குரலைக் - 213