பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டி எழுப்புவதுபோல், "என்னிலும் எழுப்பிவிட்டு விடுமே!* (வரிகள் 57-62). (Make me thy tyre, even as the forest is : YWhat if my leaves are felling like its own;! The tumuit of thy mighty harmonies Will take from both a deep, autumnal tcne Sweet though in sadness....) இவ்வாறு மரங்களைப் பாடவைப்பதுபோல், மேல்காற்று தன் இதயத்திலும் புகுந்து அதனைப் பாடடவைக்கவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறான் ஷெல்லி, அத்துடன் நிறுத்த வில்லை. இலையுதிர் காலத்தின் சோகக்குரல் வருத்தம் நிறைந்து

  • ஒலித்தாலும், அது வசந்தத்தின் வருகையை முன்னறிவிக்கும்

இனிமையையும் உட்கொண்டிருக்கிறதே! அதுபோல், ஷெல்லி யும் வசந்தத்தின் வருகையைத் தன் கவிதா வாழ்விலும்

  • எதிர்பார்க்கிறான். எனவே அவன் மேல் காற்றை நோக்கி

மேலும் பேசுகிறான்; ** வாடி வதங்கிய இலைகளை உலகெங் கணும் பரப்புல துபோல், புதியதொரு பிறவியைத் துரிதப் படுத்துவதற்காக, எனது வாழ்விழந்த சிந்தனைகளை உலகெங் கணும் விரட்டிப் பரப்பு! மேலும், அணைந்து போகாத நெருப் பிலிருந்து சாம்பலையும் தீப்பொறிகளையும் விசிறிச் சிதற வைப்பதுபோல், இந்தக் கவிதையின் உச்சாடனத்தால், எனது வார்த்தைகளை மனித வர்க்கத்திடையே சிதறப் பரப்பி விடு! இந்த விழிப்புறாத உலகத்துக்கு எனது வாயின் மூலம் ஒரு தீர்க்க தரிசனத்தின் எக்காளம்போல் முழக்கமிடு! காற்றே! மாரிக்காலம் வந்துவிட்டால், வசந்தம் மட்டும் மிகவும் பின்தங்கியா நின்றுவிடும்? (வரிகள் 63-70):. (Drive my dead thoughts over the universe Like withered leaves to quicken a new birth! And, by the incantation of this verse; Scatter, as from an unextinguished hearth Ashes and sparks, my words among mankind1. Be through my lips to unawakened earth 214