பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைக்.ஐவிழந்து. எனவே தார்ச்சி" The trumpet of prophecy!)' wind, IF Winter comies, can Spring be !ar behind?) ஆம். ஷெல்லி தன்னிடத்தில் பூரணமாக நம்பிக்கை இழந்துவிடவில்லை, தனது வலிமையின்மையை உணர்ந்து வருந்தும் அதே சமயம். அவனது கவிதா ஆவேசமும் தோல்வி காண விரும்பாமல், மீண்டும் தளர்ச்சி நீங்கி நிமிர்ந்து நிற்கத் துடிக்கிறது. எனவே அவன் காற்றை நோக்கி, 'எனது வலுவிழந்த சிந்தனைகள் இந்தப் பூமிக்கு வாடிய இலைகளை போல் உர மாக உலா றிப் புத்துயிரைத் தோற்றுவிக்க உதவட்டும்; இனியேனும் என் கதையின் மந்திர சக்தி நீறு பூத்த நெருப்பிலிருந்து பறக்கும் தீப்பொறி களைப்போல், மனித குலத் திடையே பரந்து விழுந்து பற்றிப் பிடிக்கட்டும், தூங்கிக்கிடக்கும் உலகத்தை, இனியேனும் எனது குரல் எக்காள முழக்கம்போல் உள்ளியெழுச்சி பாடி விழிப்புறச் செய்யட்டும், புதிய தீர்க்க தரிசனத்தை தட்டி பறை சாற்றட்டும். வாழ்வில் இலையுதிர்காலம் புகுந்தது வாஸ் தவம்தான், எனினும் அதுவே வசந்தம் வரப்போகிறது என்பதற்கான அறிகுறிதானே!* என்று பேசி, தனக்குத் தானே நம்பிக்கை ஊட்டிக் கொள்கிறன், *மேல் காற்று' என்ற இந்தப் பாடல் ஷெல்லியின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு தளர்ச்சியையும் சோர்வையும் பிரதிபலிக்கும் அதே சமயத்தில், அவளது லட்சியத்தில் அவனுக்குள்ள பிடிப்பை யம், அது வெற்றி பெறத்தான் செய்யும் என்ற அவனது தன்னம்பிக்கையும் உறுதியையும் ஊக்கத்தையும் பிரதிபலிக் கத்தான் செய்கிறது. இல்லையா? இனி, பாரதிக்கு வருவோம். பாரதி ஷெல்லியின் இந்தப் பாடலில் ஈடுபாடு கொண்டிருந்தான் . என்பதை முன்னர் குறிப்பிட்டோம். எனினும் இந்த ஈடுபாடு எந்த அளவுக்கு இருந்தது, எந்த . அள வுக்கு அவன் ஷெல்லியி லிருந்து மாறுபட்டான் என்பதை இங்குப் பார்ப்போம் , பாரதியும் ஷெல்லியைப்போலவே வாழ்க்கையில் பல 'இன்' பங்களை இழந்தவன்; குடும்பத்திலே எவ்வித இழப்பும் நேராவிட்டாலும், சுதந்திரம் இழந்த நாட்டில், நடமாடும் - - 215