பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரத்தையும் இழந்து, பாண்டிச்சேரிக்குச் சென்று பல் லாண்டுக்கா வம் அஞ்ஞாத வாசம் புரிய நேர்ந்தவன்; தனக்கு வேண்டிய தலைவர்களும் நண்பர்களும் சிறைக் கூடத்திலும், பிற இடங்களிலும் இருக்க, அவர்களை யெல்லாம் பிரிந்து தேசப் பிரஷ்டனைப்போல் வாழ்ந்தவன்; இத்தனைக்கும் மேலே வறுமையின் கொடுமைக்கும் ஆ கள ஈ கி வாடி வதங்கியவன். எனவே அவனுக்கும் தன் நிலைwith யக், கண்டு சலிப்பும் ஆத்திரமும் ஏற்பட்டதுண்டு, எ னி னு ம் ஷெல்லியைப்போல் அவன் மனம் நொந டித்துப் போய்விட வில்லை. ஒரு காலத்தில் அடங்காத புரட்சி வேகத் தோடிருந்த ஷெல்லி காலத்தின் பசார விலங் கால் கட்டுண்டு, வாழ்க்கையெனும் முட்படுக்கையில் விழுந்து , ரத்தம் கொட்டும் நிலைக்கு ஆளாக்கி விட்டதாக அவனே கூறுகிறான். எனவே மேல் காற்றை நோக்கி, 'நீ என்னை உனது வீணை காக்கி இசையெழுப்ப மாட்டாயா?' என்று கேட்கிறான். பாரதியோ தன்னை நா தமிழந்துபோன வீணை யாகக் கருத வில்லை; தன்னை “நல்லதோர் வீணை” 'யாகத் தான் கருது கிறான். ஆனால் அந்த வீணை பயன்படாமல் புழுதியில்- வறுமைப் புழுதியில்-கிடந்து நலம் கெட்டுப்போகிறதே என்றுதான் அவன் கவலை கொண்டான். ஷெல்லி மேல் காற்றை நோக்கிக் கேட்டதுபோல், பாரதி சிவசக்தியை நோக்கிப் பின்வருமாறு கேட்கிறான் (நல்லதோர் வீணை): நல்லதோர் வீணை செய்தே-அதை நலம்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ? சொல்லடி, சிவசக்தி-எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய். வல்லமை தாராயோ-இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி சிவசக்தி--நிலச் சுமையென் வாழ்ந்திடப் புரிகுவையோ? (பாட்டு. 1) பார தி தனது சக்தியில், திறமையில் நம்பிக்கை இழந்து விடவில்லை, ஆனால் வறுமையின் காரணமாக, தான் இந்த 216