பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாநிலம் பயன்பட முடியாமல், வலிமை குன்றி நிலச்சுமை யாக வாழ்வதுதான் அவனுக்குச் சகிக்கவில்லை. எனவே அவன் சிவசக்தியை நோக்கி, 'சொல்லடி.! என்று அதிகாரத் தோரணையுடன் கேள்வி விடுக்கிறான். வறுமையின் காரண மாக உடல் நலக்குறைவு; அதனால் உயிரும் குன்றுகிறது; வைராக்கியம் குன்றுகிறது. இவை குன்றினால் பிறகு நிலச் சுமையாகத்தானே இருக்க முடியும். ஆனால் அப்படியிருக்க அவன் விரும்பவில்லை, எனவே அவன் அவளை நோக்கி, . ' விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டியபடி செலும் உடல் கேட்டேன். நசையறு மனம் கேட்டேன் நித்தம் . நவமெனச் சுடர்தரும் உயிர் கேட்டேன், தசையினைத் தீ சுடினும்-சிவ சக்தியைப் பாடும் நல் அகம் கேட்டேன். அசைவறு மதி கேட்டேன்--இவை - அருள்வதில் உனக்கெதும் தடையுளாதா? . (பாட்டு, 2) என்று கேட்கிறான். ஷெல்லி தன்னை வீணை யாக்கிக் கொள்ளு மாறு மேல் காற்றைக் கேட்டதைப்போன்று, வீணையாகிய தன்னைப் புழுதியிலிருந்து கை தாக்கி விடுமாறு பாரதி சிவசக்தி யிடம் கேட்பது ஒன்றுதான் இந்த பாடலுக்கும், மேல் காற்றுக்கும் உள்ள சம்பந்தம். ஆனால் மேல் காற்று 'க் கவி தையைக் கற்றறிந்த பாரதி, காற்றைப் பற்றிய தனது - கருத்தை வேறிடத்தில் தான் குறிப்பிடுகிறான், இதனைக்

  • காற்று' என்ற தலைப்பில், வசன கவிதை என்ற பெயரால்

'இடம்பெற்றுள்ள அவனது எழுத்துக்களில் நாம் காணலாம், இதன் முதற்பகுதியில் பாரதி காற்றில் ஆடும் இரு கயிறுகளைக் கந்தன், வள்ளி என்ற காதலர்களாகக் கண்டு, அவற்றைக் கொண்டு ஓர் அருமையான காதல் நாடகத்தையே நடத்திக் காட்டுகிறான். இந்த நாடகத்தின் இறுதியில், காற்றுத் தேவனை, இவ்வாறு பேச வைக்கிறான்; <' என்னுடன் உறவு கொண்ட உடல் இயங்கும். என்னுறவில்லாதது சவம், நான் பிராணன்... நான் விழிக்கச் செய்கிறேன். அசையச் பா. ஷெ-15 217