பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானம்பாடியும் சிட்டுக்குருவியும் ஷெல்லியின் "வானம்பாடி' உள்ளடக்கத்திலும் உரு வத்திலும் அற்புதமான அழகோடமைந்த கவிதையாகும் , இந்தக் கவிதையை அவன் 1820-ம் ஆண்டில் எழுதினான். 'மேல் காற்று' என்ற கவிதையை எழுதும் காலத்தில் அவனது மனோநிலை எவ்வாறிருந்தது என்பதை முன்னர் பார்த்தோம், அந்த மனோநிலை அடுத்த ஆண்டில் அப்படி யொன்றும் மாறி விடவில்லை. அப்போது பல்வேறு துன்பங் களும் அவனை வாட்டிக் கொண்டிருந்தன என்றே சொல்ல வேண்டும், அவன் புரட்சிகரமான கருத்துகளைக் கொண்ட கவிதைகளை எழுதினாலும் அவற்றை அச்சேற்றிப் பரப்ப 'முடியாத அளவுக்கு, ஆங்கில நாட்டில் நிலவிய அதிகார வர்க்கத்தின் கெடுபிடியும் அடக்கு முறையும் ஒரு புறம்; வாழ்வில் ஏற்பட்ட துன்பமும் துயரமும் தோல்வியும் ஒரு புறம்; இவற்றோடு நெஞ்சுவலியும் பலவீனமும் சேர்ந்து நலிந்துபோன உடம்போடு, அவனது மனத்தில் குடிகொண் டிருந்த மரணபயம் ஒருபுறம், இத்தகைய சூழ்நிலையில் அவனும் அவனது மனைவியும் மனச் சாந்திக்காக, சுற்றுப் பயணம் செய்து திரிந்தார்கள். இவ்வாறு அவர்கள் லெக் ஹார்ன் என்ற இடத்தில் ஓரிரு வாரங்கள் தங்கியிருந்த காலத்தில், ஓர் அழகிய மாலை வேளையில் இருவரும் தெரு வழியே நடந்து சென்றார்கள், அப்போது சில வானம் பாடி.சள் பாடிக் கொண்டு விண்ணில் வீச்சிட்டுப் பறப்பதை ஷெல்வி கண்டான். இதுவே வானம்பாடி என்ற கவிதை பிறப்பதற்குக் காரணமாயிற்று. நெஞ்சில் கவலையையும் விரக்தியையும் சுமந்து திரிந்த ஷெல்லிக்கு, கவலையற்றுப் பறக்கும் சுதந்திரமான வானம்பாடியைக் கண்டதும், அது - தன்னைக் காட்டிலும் பாக்கியசாலி என்ற எண்ணம் தோன்றியது. இந்த எண்ணத்துடனேயே அவன் வானம் பாடியை நோக்கிப் பாடினான். எனவே 'ஆனந்தமான ஜீவனே! உனக்கு வாழ்த்துக்