பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்!' (Hail to the, blithe Spirit!) என்றே அந்தக் கவிதை தொடங்குகிறது. வானம்பாடி திட்டமிட்டுக் கட்டாத, சுய ' மான இசையின் நாத வெள்ளத்தை இடையறாது பொழிந்த தன் இதய நிறைவை வெளிப்படுத்தி, விண்ணில் பறக்கிறது. பூமியிலிருந்து தீப்பிழம்புபோல் கதித்தெழும்! விண்ணில் விஞ்சி விஞ்சிப் பறக்கின்றது. விண்ணிலத்தின் பேராழத்தில் சிறகடித்து நீந்துகிறது. பாடும்போதே பறக்கிறது; பறக்கும் போதே பாடுகிறது . வானில் அஸ்தமன சூரியனின் பொன் னிறமான மின்னொளியில் மேகங்கள் எல்லாம் ஒளிபெற்றுப் பளிச்சிடுகின்றன. இந்தப் பின்னணியில் ஸ்தூல உடம்பற்ற ஆனந்தத்தின் புத்தம் புதிய தோற்றம்போல் அது மிதந்து உறந்தோடுகின்றது. தன் வேகத்திலும் ஒளிமயக்கிலும், அந்த வானம்பாடி பகலில் தெரியும் தாரகைபோல் கண் மறைந்து போனாலும், அதன் இனிய கீதம் மட்டும் கேட் கிறது. வானமும் பூமியும் அதன் இசை வெள்ளத்தால் நிறைகின்றது. நிர்மலமான இருண்ட வானில் ஓற்றைத் தனி முகிலுக்கப்பாலிருந்து பொழியும் சந்திரிகைப் பிரவாகத் தால் வானமே நிரம்பி வழிவதைப்போல், அதன் இசை நிரம்பிப் பரவுகிறது. அந்த வானம்பாடி எத்தகையது , எப்படிப்பட்டது என்பதெல்லாம் நமக்குத் தெரியவில்லை , எனினும் அதன் வரவோ வானவில்லைத் தோற்றுவிக்கும் கார்மேகங்களிலிருந்து பொழியும் நீர்த்துளிகளைக் காட்டிலும் பிரகாசமான இசைத் தாரைகளைப் பொழிகின்றது. அது எப்படிப் பாடுகின்றது? தான் பொருட் படுத்தாத நம்பிக்கைகளையும் அச்சங்களை யும் கொண்ட உலகத்துக்கு அனுதாப உணர்ச்சி ஏற்படும் வரையிலும், சிந்தனை யொளியில் மறைந்திருக்கும் கவிஞன் ஓருவன், தானே வலிய வந்து அருட்பாக்களைப் பாடுவது போல்; அரண்மனை மாடத்திலுள்ள உயர்குல நங்கை யொருத்தியின் காதலைப்போல்; இனிய சங்கீதத்தால் அந்தரங்கமான நேரத்தில், காதல் நிறைந்த தன் ஆத்மாவை இதப்படுத்தி இனிய கீதத்தைப் பொழிவதுபோல்; பனித்துளி படிந்த பதுங்கிடங்களிலிருந்து தங்கமயமான மின்மிணிப் பூச்சியொன்று, தன்னை மறைத்திருக்கும் பூக்கள், புல் ஆகிய