பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வற்றின் மீது தனது மர்மமான ஒளியைக் கவனிப்பற்றுச் சிதறுவது போல்; இதமான காற்றால் மலர்ந்து விரிந்து, தன்னை நாடிவரும் வண்டுக் கூட்டத்தைத் தனது நறுமணத் தால் மயக்கமுறச் செய்கின்ற ரோஜா மலரைப்போல்;-- அந்த கீதம் ஒலிக்கின்றது. பளபளக்கும் புல்லின் மீது பொ"Lழியும் வசந்த கால மழையின் ஒலி, மழையால் விழிப் புற்ற மலர்கள் ஆகிய எல்லாவற்றின் ஆனந்தத்தையும் தெளி வையும் புதுமையையும் அதன் இசை விஞ்சி விடுகின்றது. - இவ்வாறு டாடும் அந்தப் பறவையை நோக்கி ஷெல்லி மேலும் பேசுகிறான்: * தேவதையே! அல்லது பறலையே! '2.னது இனிய எண்ணங்கள்தான் என்ன என்பதை எங் களுக்கும் கற்றுக்கொடு . இத்தகையதோர் தெய்வீகத் தன்மை யான பரவச வெள்ளத்தோடு மூச்செறிந்து வெளியிடப் பெற்ற, எந்தவொரு காதல் அல்லது மதுவின் புகழையும் நான் என்றும் கேள்விப்பட்டதில்லை” (வரிகள் 81-65); {Teach as, Sprite or Bird What sweet thoughts are thine: 1 have never heard Praise of love or wine That panted forth a food of rapture So divine). உனது ஆனந்தமான, இசைக்கு ஊற்றாக விளங்கும் பொருள்கள் தான் என்ன? அவை எந்த வயல்கள்? அல்லது அலைகள்? அல்லது மலைகள்? எந்த மாதிரியான வானம்? அல்லது சமவெளி? உனது வர்க்கத்தின் காதல் தன்மை தான் என்ன? வேதனையைத் தெரியாதிருக்கும் விதம் தான் என்ன ?' {வரிகள் 71-7.): (What objects are the fountains Of thy happy strain? . What fields, or waves, or mountai12s ! What shapes of sky Or plain? ' What iove of thine own kind? What ignorance of pain?) . .. 1. க - 4 284